சின்னத்திரையில் தனது காமெடியால் ரசிகர்களை மனதை கவர்ந்தவர் சந்தானம், அதன்பிறகு வெள்ளித்திரையில் கால் தடம் பதித்தார், பல முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடியனாக வலம் வந்தவர் சந்தானம், கவுண்டமணி செந்தில் வடிவேலு க்கு பிறகு சந்தானம் தான் காமெடியில் சிறந்து விளங்கினார்.
அதன் பிறகு ஒரு காலகட்டத்தில் காமெடியில் நடிப்பதை விட்டுவிட்டு முழு நேர ஹீரோவாக களம் இறங்கினார், அதில் வெற்றியும் கண்டார், கடந்த வருடம் சந்தானம் நடித்த ஏ1, தில்லுக்குதுட்டு இரண்டாம் பாகம், ஆகிய திரைப்படங்கள் ஹிட்டடித்தது.
இந்த நிலையில் சந்தானம் நடிப்பில் ஜனவரி 27-ல் சர்வர் சுந்தரம் மற்றும் டகால்டி திரைப்படம் வெளியாக இருப்பதாக தகவல் வெளிவந்தது. மேலும் சந்தானம் டிக்கிலோனா படத்தில் நடித்து வருகிறார், மேலும் சந்தானம் பிறந்தநாளன்று கே ஜி ஆர் ஸ்டுடியோ நிறுவனம் சந்தானத்தின் பிறந்தநாள் விழா புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
அந்த புகைப்படத்தில் சந்தானம் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மிகவும் ஸ்டைலிஷாக இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சந்தானமா இவ்வளவு ஸ்டைலாக இருப்பது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
We wish the santa in K'Town a happy birthday!!??#Dikkiloona #HBDSanthanam @iamsanthanam @karthikyogitw @thisisysr @SoldiersFactory @AnaghaOfficial @KanchwalaShirin @sinish_s @twitavvi @J0min @Dineshsubbaray1 @keerthivasanA @Arunrajakamaraj @sherif_choreo @prathool pic.twitter.com/VNyxPSYT24
— KJR Studios (@kjr_studios) January 21, 2020