Redin Kingsley: பிரபல காமெடி நடிகரான ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை சில வாரங்களுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்ட நிலையில் தற்போது இந்த தம்பதியினர்கள் ஹனிமூனை கொண்டாடி வருகின்றனர். மேலும் நியூ இயர் ஸ்பெஷலாக இருவரும் செம ஸ்டைலாக எடுத்துக் கொண்டு புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகரான ரெடின் கிங்ஸ்லி டாக்டர் படத்தின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார் இவருடைய எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தது. கோலமாவு கோகிலா, எல்.கே.ஜி, கூர்க்கா போற்ற திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்தார்.
டாக்டர் படம் தான் சிறந்த அறிமுகமாக அமைந்தது இதனை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், விஜய் சேதுபதி, சிம்பு, விஷால் உள்ளிட்ட டாப் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது ரெடின் கிங்ஸ்லிக்கு 46 வயது ஆகிறது ஆனால் சிங்கிளாக இருந்து வந்த இவர் சமீபத்தில் சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்துக் கொண்டார்.
சங்கீதா சன் டிவியில் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார் மேலும் திரைப்படங்களிலும் சின்ன சின்ன கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி விஜய்யின் மாஸ்டர், சந்தானத்தின் பாரீஸ் ஜெயராஜ், வீட்ல விஷயம் படங்களில் நடித்துள்ளார்.
நியூ இயரை ஒன்றாக கொண்டாடிய ரெடின் கிங்ஸ்லி, சங்கீதா தம்பதியினர் ஜோடியாக எடுத்துக் கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது. இதில் டைட்டானிக் ஜேக் ஸ்டைலில் ரெடின், ரோஸ் ஸ்டைலில் சங்கீதா போஸ் கொடுத்துள்ளார்கள். காமெடி நடிகராக இருந்தாலும் ரெடின் கிங்ஸ்லி தனது மனைவியுடன் இருக்கும் பொழுது ஹீரோ போல் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.