அட இவர் தான் நம்ம மயில்சாமி மகனா..? இத்தனை வருஷமா இது தெரியாம போச்சே..!

mayilsamy

comedy actor mayilsamy son latest image: தமிழ் திரை உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் மயில்சாமி. இவர் பல திரைப்படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலமாக ரசிகர்களை விடாமல் சிரிக்க வைத்துள்ளார்.

அந்த வகையில் தூள், கில்லி, நான் அவனில்லை, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், ரெண்டு, திருவிளையாடல் ஆரம்பம், போன்ற திரைப்படங்களில் இவருடைய காமெடிகள் மறக்கமுடியாத காமெடியாக அமைந்திருக்கும்.

நடிகர் மயில்சாமி திரைப்படத்தில் காமெடி நடிகராக நடிப்பது மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் திரைப்படத்தில் துணை நடிகராகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து தன்னை பிரபலப் படுத்தி உள்ளார்.

ஆரம்பத்தில் முன்னணி காமெடி நடிகர்களுக்கு துணையாக நடித்து வந்த மயில்சாமி தற்போது சோலாவாகவும் பல திரைப்படங்களில் காமெடி செய்ய ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் சமீபத்தில் ஆர் ஜே பாலாஜி நடிப்பில் வெளிவந்த எல்கேஜி என்ற திரைப்படத்தில் கூட இவர் சோலோவாக நடித்திருப்பார்.

இவ்வாறு காமெடியில் திரை உலகில் கலக்கி வரும் மயில்சாமியின் மகன் புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் நடிகர் மயில்சாமியின் மகன் தல அஜித்துடன் இருப்பதன் காரணமாக இந்த புகைப்படம் வைரலாக பரவியது மட்டுமல்லாமல் விரைவில் இவர் தல அஜித்துடன் நடிக்க போகிறார் என அரசல்புரசலாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ajith mayil samy son
ajith mayil samy son