90, 80 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் கவுண்டமணி. இவர் நடித்து வந்த காலத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் இவர்களின் கூட்டணி இல்லாமல் எந்தப் படமும் இருக்காது.
அந்த அளவிற்கு இவர்கள் சினிமாவில் தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தங்களது முத்திரையைப் பதித்தார்கள். இன்றளவும் இவர்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருந்துதான் வருகிறது.
இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காமெடிகளில் வாழைப்பழ காமெடி இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது. எத்தனை முறை பார்த்தாலும் முதல் தடவை பார்த்தது போலவே இருக்கும்.
தற்பொழுது பத்து வருடங்களுக்கு மேலாகியும் திரைப்படங்களில் நடிக்காமல் இருக்கிறார் கவுண்டமணி.அந்தவகையில் இவர் கடைசியாக வாய்மை திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் சமீபகாலமாக இணையதளத்தில் பல பிரபலங்களின் புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த வகையில் கவுண்டமணியின் திருமணத்தின் பொழுது எடுத்த புகைப்படம் தற்போது வெளிவந்துள்ளது.
நடிகர் கவுண்டமணி 1963ஆம் ஆண்டு சாந்தி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அப்பொழுது எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.