விஜய் டிவியில் காமெடிக்கு என்று தனி முக்கியத்துவம் கொடுத்து பல என்டர்டைன்மென்ட் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதன்மூலம் முதலில் சின்னத்திரையில் தனது காமெடி திறமையை வெளிப்படுத்தி அதன் மூலம் வெள்ளித்திரை வாய்ப்புகளையும் பல பிரபலங்கள் பெற்றுள்ளனர்.
அந்தவகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு தனது காமெடி மற்றும் ரியாக்ஷன் போன்றவற்றை சிறப்பாக வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் புகழ். இந்த நிகழ்ச்சி புகழை வேற லெவலில் கொண்டு சென்றுள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து தற்போது சினிமாவிலும் பல நடிகர்களின் படங்களில் புகழ் காமெடியனாக நடித்து அசத்தி வருகிறார்.
வெள்ளித்திரையில் காமெடியனாக நடிப்பதையும் தவிர்த்து ஹீரோவாகவும் மிஸ்டர் ஜூ கீப்பர் என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு பிலிப்பைன்ஸ் நாட்டின் நிஜ விலங்குடன் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இப்படி சினிமாவில் பிஸியாக ஓடிக் கொண்டிருக்கும் புகழ் தன்னை பிரபலப்படுத்திய குக் வித் கோமாளி தற்போது 3வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
நேரம் கிடைக்கும்போது இதிலும் கலந்து கொண்டு மக்களை என்டர்டைன்மென்ட் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குக் வித் கோமாளி கடந்த மூன்று சீசன்களிலுமே அண்ணன் தங்கையாக பாச மழையைப் பொழிந்து வரும் புகழ் மற்றும் சிவாங்கி நாம் அனைவரும் அறிந்த ஒன்றே..
தற்போது புகழ் தனது தங்கை சிவாங்கியுடன் இணைந்து மேடையில் பாடல் ஒன்றை பாடியுள்ளார். அந்த பாடல் வீடியோவை புகழ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் கமெண்ட் களையும் பெற்று வருகின்றனர். இதோ அந்த வீடியோ