vivek Tweet : தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் நடிகர் விவேக், விவேக் காமெடி என்றாலே தனித்து தெரியும், அந்த அளவிற்கு விவேக் காமெடியில் சமூக கருத்தும் நகைச்சுவையும் கலந்து இருக்கும்.
பல காமெடி நடிகர்கள் பிறரை கிண்டல் செய்து தான் காமெடி செய்து காமெடியனாக வளர்ந்து வந்துள்ளார்கள், ஆனால் சமூக கருத்தையும் நகைச்சுவையையும் ஒன்றாக கொடுத்து வளர்ந்தவர் தான் விவேக், விவேக் சமூக அக்கறை கொண்டவர் அதனால் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்காக எப்பொழுதும் ட்விட்டரில் கருத்து தெரிவிப்பார்.
இந்த நிலையில் தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் இவருடைய கருத்து நிறைந்த காமெடிகள் பலவும் ரசிகர்களால் மீம்ஸ்களாக உருவாக்கப்பட்டு ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
அது மட்டுமில்லாமல் உங்கள் கருத்துக்களால் பல இளைஞர்களுக்கு நல்ல அறிவுரைகளை மிக எளிதாக கொண்டு சேர்க்க முடிகிறது என பல தரப்பில் இருந்தும் விவேக்கிற்கு பாராட்டு வந்தவண்ணம் உள்ளது. இதற்கு ட்விட்டரில் விவேக் முதன்முதலாக பதிலளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது என்னைப் போன்ற கலைஞர்களுக்கு ரசிகர்களின் பாராட்டு மிகப்பெரிய டானிக் என்றும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி என்றும் மெய் சிலிர்த்துப் போய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
இதோ அந்தக் கருத்து பதிவு.
மிக்க நன்றி. இது போன்ற பாராட்டுக்கள் என் போன்ற நடிகர்களுக்கு டானிக். https://t.co/isRCEl6bxo
— Vivekh actor (@Actor_Vivek) August 7, 2020