சின்னத்திரையில் காமெடி நடிகராக வலம் வருபவர் தீனா. இவர் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோகளை தொகுத்து வழங்குகிறார் அதுமட்டுமில்லாமல் கலக்கப்போவது யாரு மற்றும் பல தொகுப்புகளில் காமெடியனாக தனது சிறந்த நடிப்பை வெளிக் காட்டி மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
இந்த நிலையில் அவர் கடந்த ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளிவந்த ‘கைதி’ என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிகாட்டி வெள்ளி திரையில் பிரபலம் அடைய தொடங்கியுள்ளார் அதுமட்டுமில்லமால் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். இதனை அடுத்து அவர் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவர உள்ள மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது கொரோனா வைரஸ் உலகையே அச்சியுறுத்தி இந்த வைரஸ் தொற்று நோய் என்ற காரணத்தினால் காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 வரை நீடிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது இந்த நிலையில் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
இதனால் சினிமா பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் மக்களை ஊக்குவிக்கும் விதமாக விழிப்புணர்வு வீடியோ மற்றும் பலவற்றை வெளியிட்டு உற்சாகப்படுத்திய வருகின்றனர். ஒரு சிலர் தங்களது அன்றாட வாழ்கை முறையை வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர் அந்த வகையில் காமெடி நடிகரான தீனா அவர்கள் தனது கிராமத்து வீட்டில் இருக்கும் மாட்டின் காலை கரைப்பது போல் வீடியோ ஒன்றினை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திய வருகிறார்
இதோ அந்த வீடியோ
Veetla velai Pathu Evalo nal achu.. @vijaytelevision pic.twitter.com/VpRnTDakQm
— Dheena Actor (@DheenaActor) April 4, 2020