காமெடி நடிகர் கவுண்டமணி குவித்து வைத்திருக்கும் முழு சொத்து மதிப்பு எவ்வளவு கோடி தெரியுமா.?

gowndamani-
gowndamani-

70 காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்து கொண்டு வருபவர் நடிகர் கவுண்டமணி.

சினிமா ஆரம்பத்தில் காமெடியனாக தனது பயணத்தை ஆரம்பித்து இருந்தாலும் இவரது திறமையை அளப்பரியதாக இருந்த காரணத்தினால் இவருக்கு ஒரு சமயத்தில் கதாநாயகனாகவும், வில்லனாகவும், முக்கிய வேடங்களிலும் நடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் ராமன் எத்தனை ராமனடி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பின் இவருக்கு வாய்ப்புகள் ஏராளமாக குவிந்தது  சொல்லப்போனால் ஒரு வருடத்திற்கு  ஆறு, ஏழு படங்களில் நடிப்பது வழக்கம்.

அந்த காரணத்தினாலேயே தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நாயகனாக கவுண்டமணி மாறினார் மேலும் இவரது  காமெடி சிறப்பாக இருக்க காரணம் அவரது சக நடிகரான செந்தில் மற்றும் இவரது கூட்டணி அற்புதம் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் காமெடி காட்சிகள் வேற லெவல் இருந்து வந்துள்ளன கவுண்டமணி இதுவரை 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சில காலமாக சினிமா உலகில் பெரிய அளவு தலை காட்டவில்லை என்றாலும் கடைசி திரைப்படங்களில் மட்டும் ஹீரோவாக நடித்து வருகிறாராம் அந்த வகையில் 49ஓ, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் கவுண்டமணி குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று உலா வருகிறது அதன்படி பார்க்கையில் நடிகர் கவுண்டமணி முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் 50 கோடி இருக்கும் என தெரியவந்துள்ளது