80,90 காலகட்டத்தில் சினிமாவில் காமெடி நடிகர்களாக ஒரு கலக்கு கலக்கியவர்கள் நடிகர் செந்தில் மற்றும் கவுண்டமணி தான். தற்பொழுது இவர்கள் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இவர்களை சினிமா பிரபலங்கள் மற்றம் ரசிகர்களால் மறக்க முடியாது.
அதுவும் முக்கியமாக வாழைப்பழம் காமெடி இன்றளவும் பிரபலமாக உள்ளது. பல முறை பார்த்தாலும் போரடிக்காத காமெடியாக வாழைப்பழம் காமெடி திகழ்கிறது.
இந்நிலையில் செந்திலின் நெருங்கிய நண்பர் ஒருவர் பேட்டி ஒன்றில் செந்திலை பற்றி சில சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
தல அஜித் என்றாலே ரேஸ் தான் நாம் அனைவருக்கும் முதலில் ஞாபகம் வரும் தல கார்களின் மீது எவ்வளவு பிரியம் உடையவர் என்பது நாம் அனைவருக்கும் தெரியும் அதேபோலவே செந்திலும் காரின் மீது கொள்ளை பிரியம் உடையவர்.
அஜித் எப்படி கார் ஓட்டுகிறாறோ அதே அளவிற்கு பயங்கரமாக கார் ஓட்டும் திறமை செந்திலுக்கு உள்ளது. அதில் பிரிமியர் பத்மினி பியட் காரை தான் செந்திலுக்கு மிகவும் பிடிக்கும்.
அதுமட்டுமல்லாமல் படப்பிடிப்பு சூட்டிங் செல்லும் பொழுது ட்ரைனை மிஸ் பண்ணி விட்டதால் அதை விட வேகமாக தனக்குப் பிடித்த பிரிமியர் பத்மினி பியட் காரை எடுத்துக்கொண்டு படப்பிடிப்பு தளத்திற்கு சென்று உள்ளார்.
அதோடு செந்திலுக்கு விபத்து ஏற்பட்டதால் தான் சில ஆண்டுகளாக கார் ஓட்டாமல் இருக்கிறார் என்றும் பிறகு தற்போது தான் டிரைவர் ஒருவரை வைத்துள்ளார் என்றும் பொதுவாகவே செந்தில் திரையில் மட்டுமல்லாமல் உண்மையாலுமே நேர்மையான நல்ல மனிதர் என்று செந்திலை புகழ்ந்து தள்ளியுள்ளார் அவருடைய நண்பர்.