பட வாய்ப்புகள் குவிய குவிய பழசை மறந்து விடுகிறார் யோகிபாபு.? விழா மேடையில் கழுவி ஊற்றிய பிரபல தயாரிப்பாளர்.

yogi-babu
yogi-babu

உலகில் எந்த நல்லது கெட்டது நடந்தாலும் அதை நேரடியாகப் பேசுவதை  பழக்கத்தை வைத்துள்ளவர் தயாரிப்பாளர் கே. ராஜன். இவர் 1980களில் பல ஹிட் படங்களை தயாரித்தவர் ஒருகட்டத்தில் இயக்குனராகவும், எழுத்தாளராகவும், நடிகராகவும் பயணித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சமீபகாலமாக சினிமா உலகில் நடக்கின்ற நல்லது கெட்டதை வெளிப்படையாக சொல்லி மக்களுக்கு மத்தியில் தகவலை கொடுத்து வருகிறார் அப்படி ஒரு சிறப்பான சம்பவத்தையும் அண்மையில் சொல்லி உள்ளார். பரமபத ஆட்டம் படத்தின் திறப்பு விழாவில் கே ராஜன் பங்கேற்று கொண்டார் அப்பொழுது காமெடியனாக இருந்து நடிகராக விஸ்வரூபம் எடுத்துள்ள நடிகர் சந்தானத்தை புகழ்ந்தும் அதேசமயம் காமெடியில் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து கொண்டிருக்கும் யோகிபாபுவை கிழித்த தெரிந்தும் பேசியுள்ளார்.

அவர் கூறியது: நடிகர் சந்தானம் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் அப்போது தயாரிப்பாளருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது இதனால் பணமே வாங்காமல் நடிகர் சந்தானம் அந்த படத்தை பெருந்தன்மையுடன் நடித்துக் கொடுத்து அசத்தினார் அதற்காகக் தயாரிப்பாளர் கே . ராஜன் அவரை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

ஆனால் நடிகர் யோகிபாபுவோ தற்பொழுது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உச்சத்தில் இருந்தாலும் இவர் மூன்று வருடத்திற்கு முன்பாக இவர் நடிப்பில் ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டது அந்த படம் இன்னும் வெளிவராமல் கிடப்பில் கிடக்கிறது அதற்கு காரணம் யோகி பாபு என கூறப்படுகிறது ஆம் இதுவரை அவர் அந்த படத்தின் டப்பிங் பேசாமல் இருந்து வருகிறார் இதனால் படம் வெளியாகாமல் இருக்கிறது.

பெரிய நடிகர், நடிகைகள் கூட நடித்து கொடுத்து பின் உடனே டப்பிங் பேசி விடுகின்றனர் ஆனால் யோகி பாபு இவ்வாறு பண்ணுவது சரி அல்ல மற்ற தயாரிப்பாளர்கள் 10 லட்சம் தருகிறார்கள் என்ற காரணத்தினால் இந்த படத்திற்கு வெறும் பத்தாயிரம் வரும் என்பதை உணர்ந்து கண்டு தட்டிக் கழிக்கிறார் என கூறப்படுகிறது. சூழ்நிலையை புரிந்துகொண்டு சந்தானம் போல் பெருந்தன்மையாக நடந்து கொள்ள வேண்டும். யோகிபாபு அதை உடனே முடித்து விட வேண்டும் என கூறியுள்ளர்.