காமெடி நடிகர் யோகி பாபுவுக்கு தனிப்பட்ட திறமை எதுவும் கிடையாது.? விளாசிய பிரபல பத்திரிகையாளர்

yogi babu
yogi babu

தமிழ் சினிமாவில் காமெடியன்னாகவும், ஹீரோவாகவும் நடித்த தொடர்ந்து வெற்றிகளை அள்ளி வருபவர் யோகி பாபு இவர் ஆரம்பத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த பின் காமெடியன்னாக திரை உலகில் நடிக்க ஆரம்பித்தார் ஒரு கட்டத்தில் அஜித், விஜய், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில்..

தொடர்ந்து நடித்து தனது மார்க்கெட்டை நாளுக்கு நாள் உயர்த்தி கொண்டே இருக்கிறார்  மற்றும் ஹீரோவாகவும் கூர்கா, மண்டேலா  போன்ற படங்களில் நடித்து வெற்றிகளை அள்ளினார் இப்பொழுதும் கூட வருடத்திற்கு மூன்று, நான்கு படங்கள் கைவசம் இருப்பதால் பிஸியான நடிகராக திரை உலகில் பார்க்கப்படுகிறார். இப்படி  ஓடும் காமெடி நடிகர் யோகி பாபுவை பற்றி  பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசியது..

சோசியல் மீடியாவில் தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. உண்மையில் யோகி பாபுவிற்கு என தனிப்பட்ட திறமைகள் ஏதுவும் கிடையாது அவர் சந்தானம், கவுண்டமணியை போல செய்து பிரபலமாகி வருகிறார் மற்ற நடிகர்களை போல அவருக்கென ஒரு தனி பாணியான காமெடி கிடையாது..

சந்தானம் நகைச்சுவை விட்டு தற்பொழுது தமிழில் ஹீரோவாக நடித்த வருகிறார் இதனால் தமிழ் சினிமாவில் ஒரு வெற்றிடம் உருவானது அதை நிரப்ப பல நடிகர்கள் மோதினார் இதை யோகி பாபு சரியாக பயன்படுத்திக் கொண்டு சந்தானத்தின் பாணியை பின்பற்றி பிரபலமாகிவிட்டார் என செய்யாறு பாலு கூறியுள்ளார்.

இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் நீங்கள் சொல்லுவது உண்மையாக இருந்தாலும் கூட அவர் எங்களை போன்ற ரசிகர்களை தொடர்ந்து மகிழ்வித்து வருகிறார்  அவர் ஒரு திறமையான காமெடி நடிகர் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை எனக் கூறி  தாறுமாறான கமெண்ட்களை கொடுத்து வருகின்றனர். இந்த தகவல் தற்பொழுது பெரிய அளவில் வைரலாகி வருகிறது.