என்னடா சொல்றீங்க.. காமெடி நடிகர் சூரியின் “முழு சொத்து” மதிப்பு இத்தனை கோடியா.?

soori
soori

சினிமா உலகில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின் காமெடியனாக விஸ்வரூபம் எடுத்தவர் சூரி இவர் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் நடித்து காமெடியனாக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி  அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அதன் பிறகு திரை உலகில் ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்தன ஒவ்வொன்றிலும்..

அதிலும் குறிப்பாக ரஜினி, விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற பல டாப் நடிகர்களின் படங்களில் காமெடிகளாகவும், முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து  தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவர் சினிமாவை மட்டும் நம்பாமல் ஹோட்டல்களையும் திறந்து அதிலேயும் காசு பார்த்து வருகிறார்.

இப்படி சிறப்பாக பயணித்து கொண்டு இருக்கும் இவர் திடீரென என்ன நினைத்தார் என்று தெரியவில்லை சினிமா உலகில் தன்னை நம்பி எந்த கதை வந்தாலும் விடுவதில்லையாம் துணிந்து நடிக்க ஆரம்பிக்கிறார். அதனால் காமெடியனாக ஓடிக்கொண்டிருந்த சூரி தற்பொழுது  முக்கிய கதாபாத்திரம் மற்றும் ஹீரோவாக நடிக்க முடிவெடுத்துள்ளார்

அந்த வகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தில் ஒரு முதன்மை கதாபாத்திரத்தில் கான்ஸ்டேபிளாக நடித்துள்ளார் இவருடன் விஜய் சேதுபதியும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது விடுதலை படம் மிகப்பெரிய படம் என்பதால் அது இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர் முதல் பாகம் வெகு விரைவிலேயே திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து மற்றொரு படத்திலும் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறாராம் சூரி. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சூரி குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம் காமெடி நடிகர் சூரியின் முழு சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 40 கோடிக்கு மேலிருக்கும் என தகவல்கள் வெளி வருகின்றன.