தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகர் என்ற அந்தஸ்தை தக்க வைத்து உள்ளவர் சூரி. இவர் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.
இப்படத்தினை தொடர்ந்து சிறப்புக்குரிய படங்களை தேர்ந்தெடுத்து அதில் தனது காமெடி திறமையை வெளிப்படுத்திய தின் மூலம் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கும் அஜித், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.
மேலும் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்துயுள்ளார். அதிலும் குறிப்பாக வெற்றிமாறன் இயக்கும் ஒரு புதிய நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்காக தற்போத சூரி ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி உள்ளார் அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கன்பார்ம் வெற்றிமாறன் இயக்கும் புதிய இப்படத்திற்காக தான் இவர் அவ்வாறு வைத்திருக்கிறார் என கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் சூரி பற்றிய செய்தி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சூரி வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் தான் முதலமாக நாம் காமெடியனாக கண்டுள்ளோம் ஆனால் அதற்கு முன்பாக பல படங்களில் அவர் குணச்சித்திர கதாபாத்திரத்தில் ஒரு ஓரமாக நின்று நடித்துள்ளார் அதிலும் குறிப்பாக விக்ரமின் பிமா, பரத்தின் காதல், அஜித்தின் ரெட் போன்ற படங்களில் நடித்துள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.