காமெடி நடிகராக தனது பயணத்தை தொடர்ந்த சந்தானம் இதுவரை அஜித் விஜய் ரஜினி போன்ற டாப் நடிகரின் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்தினார். மேலும் தமிழ் சினிமாவில் சிறந்த காமெடியனாக சந்தானம் பார்க்கப்பட்டு வந்த நிலையில் நடிகர் சந்தானம் திடீரென தனது திசையை திருப்பி தற்போது ஹீரோவாக பயணத்தை தொடர்ந்து உள்ளார்.
அவர் நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி படங்களாகின்றன அந்த காரணத்தினால் நடிகர் சந்தானத்திற்கு தொடர்ந்து வாய்ப்புகளும் குவிந்து கொண்டே இருக்கின்றன. கடைசியாக கூட நடிகர் சந்தானம் மேயாத மான், ஆடை ஆகிய படங்களை இயக்கிய ரத்ன குமாருடன் கைகோர்த்து குளுகுளு என்ற படத்தில் நடித்தார் அந்த படம் சுமாராக ஓடியது.
அதனைத் தொடர்ந்து இப்பொழுது நடிகர் சந்தானம் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார் அந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை தற்காலிகமாக அந்த படத்திற்கு சந்தானம் 15 என வைக்கப்பட்டு படத்தின் சூட்டிங் சத்தமே இல்லாமல் தொடங்கி தற்போது முழுமை பெற்றுள்ளது. இந்த படத்தில் சந்தானத்துடன் கைகோர்த்து பிரபல காமெடி நடிகர் செந்தில் நடித்துள்ளார்.
அதுவும் அவர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் அந்த போஸ்டர் தற்பொழுது படகுழு வெளியிட்டுள்ளது அந்த போஸ்டரில் செந்தில் புதிய கேட்டபில் சும்மா அசத்துகிறார் இதோ நீங்களே பாருங்கள். 90 காலகட்டங்களில் கொடி கட்டி பறந்த செந்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்தானத்துடன் கைகோர்த்து நடித்துள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு..
தற்போது பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மேலும் சந்தானமும், செந்திலும் காமெடியில் பிச்சு உதறுவார்கள் அப்படி என்றால் இந்த படம் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என தெரிய வருகிறது இதோ நடிகர் செந்திலின் புதிய லுக்கை நீங்களே பாருங்கள்..