சினிமாவில் பல நடிகர்கள் காமெடி நடிகர்களாக அறிமுகமாகி பிறகு கதாநாயகர்களாக நடிப்பதற்கு அவர்களுக்கு ஏற்றார் போல் சரியான கதை அமைந்தால் நடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ஒரு சில நடிகர்கள் காமெடியில் இருந்து ஹீரோவாக மாறும் பொழுது அதனை ரசிகர்கள் எளிதில் ஏற்றுக் கொள்வது மிகவும் கடினம்.
அந்த வகையில் தற்பொழுது சந்தானம் காமெடி நடிகராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து சரியான கதை கிடைத்ததும் தற்போது ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் இனிமேல் எந்த படத்திலும் காமெடி நடிகராக நடிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறி உள்ளார். இவரை தொடர்ந்து யோகி பாபுவும் மண்டேலா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
இவர்களை தொடர்ந்து தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்து உள்ளவர் நடிகர் சதீஷ். இவர் காமெடி நடிகர் மற்றும் துணை நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவரும் புதிதாக ஒரு திரைப் படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.
பொதுவாக சதீஷ் நடிக்கும் அனைத்து படங்களிலும் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வரும். அதேபோல் இவர் நடிக்கும் இந்த படத்திலும் காமெடியை எதிர்பார்க்கலாம். இவர் நடிக்கவுள்ள இந்த படத்தை தளபதி விஜயின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது.
இத்திரைப்படத்தில் சதீஷ்க்கு ஜோடியாக குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா நடிக்கவுள்ளார். இதற்கு முன்பு இவர் தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து உள்ளார்.ஆனால் எந்த படமும் சொல்லுமளவிற்கு பிரபலத்தை வரவில்லை. தெலுங்கிலும் தற்போது ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் குக் வித் கோமாளி மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. இது ஒருபுறமிருக்க அனைத்து காமெடி நடிகர்களும் இப்படி ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்டால் காமெடி நடிகர்களுக்கு எங்கு போவது என்று ஒருபுறம் அச்சம் இருந்து வருகிறது.