பல வருடங்களுக்கு முன் இந்த வேலையை தான் பார்த்து வந்துள்ளார் காமெடி நடிகர் சதீஷ்.!

sathish

comedian actor sathish work before cinema: சினிமா துறை உலகில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் ,நடிகைகள் பலரும் ஆரம்பத்தில் வேறு ஏதோ ஒரு வேலையில் இருந்து உள்ளனர். அப்படி எங்கேயோ ஒரு மூலையில் சினிமா ஓரத்தில் நின்று கொண்டிருந்த சதீஷ் தற்பொழுது பெரிய காமெடியனாக உருவெடுத்துள்ளார்.

சதீஷ் தற்போது தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், சிவகார்த்திகேயன் மற்றும் பல உச்ச நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு நிலையான இடத்தைப் பிடித்து பயணித்துக் கொண்டு வருகிறார்.

ஆனால் சதீஷ் அவர்களோ சுமார் 8 வருடங்களுக்கு முன்பாக உதவி இயக்குனராக பணியாற்றி வந்துயுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இவர்  காமெடி நடிகர் கிரேசி மோகன் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன்பின்னர்தான் எல் விஜய் இயக்கத்தில் பொய் சொல்ல போறோம் என்ற காமெடி திரைப்படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றினார்.

sathish
sathish

இதன் பிறகுதான் தமிழ் சினிமா உலகில் மிகப்பெரிய அளவிலான ஹிட் படங்களில் நடிக்க தொடங்கினார் அந்த வகையில் இவர் மதராசபட்டினம், எதிர்நீச்சல் ,மான்கராத்தே, தமிழ் படம் 2 போன்ற பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் அடுத்த பட வாய்ப்பை கைப்பற்றினார்.

சதீஸ் அவர்கள் முழுக்க முழுக்க தனது திறமையின் மூலமாகவே தமிழ் சினிமா உலகில் கால் ஊன்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் தற்போது பல படங்களில் கமிட்டாகி உள்ளார்.