தமிழ் சினிமாவில் வெளியான அங்காடி தெரு என்ற திரைப்படத்தின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை அஞ்சலி இவ்வாறு இவர் நடித்த முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதன் காரணமாக எளிதில் அடுத்த அடுத்த திரைப்பட வாய்ப்பை பெற ஆரம்பித்து விட்டார்.
இதனை தொடர்ந்து நமது நடிகை தமிழில் எங்கேயும் எப்போதும், பலூன், கலகலப்பு போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்தது மட்டும் இல்லாமல் இவர் தெலுங்கு மலையாளம் போன்ற பிற மொழி சினிமாவிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
மேலும் இவர் சினிமாவில் பிரபலமாக இருக்கும் பொழுது முன்னணி நடிகையாக ஒரு ரவுண்ட் வந்த நிலையில் சமீபத்தில் வேற்று மொழி திரைப்படங்களில் அதிக அளவு கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவருக்கு தமிழில் சொல்லும்படி சரியான வாய்ப்பு கிடைத்ததா என்றால் அது கிடையாது.
இந்நிலையில் நல்ல திரைப்படத்திற்காக காத்திருந்த நமது நடிகைக்கு கிடைத்தது என்னவோ காமெடி நடிகரின் திரைப்பட வாய்ப்பு தான். தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகிபாபு மண்டேலா கூர்க்கா போன்ற பல்வேறு திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வெற்றி பெற்றுள்ளார்.
இவ்வாறு வெளிவந்த செய்தியை பார்த்த பல்வேறு ரசிகர்களும் உங்களுடைய நிலைமை இப்படி ஆயிற்று என பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் அஞ்சலி அவருடன் நடித்தால் என்ன தப்பு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கூட யோகி பாபு உடன் இணைந்து கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார் அந்தவகையில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருப்பதன் காரணமாக நான் நடிப்பதில் தவறில்லை என்று கூறியுள்ளார்.