70, 80 காலகட்டத்தில் சிவாஜி எம்ஜிஆர் ஆகிய ஒரு இருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு அடுத்ததாக பல நடிகர், நடிகைகள் இருந்தாலும் அவர்கள் எல்லாம் தனது காமெடி திறமையின் மூலம் ஓரம்கட்டி அதிக பட வாய்ப்பை பெற்றவர் காமெடி நடிகர் நாகேஷ்.
காரணம் சிவாஜி, எம்ஜிஆரின் செல்லப்பிள்ளையாக இவர் இருந்ததால் அவர்கள் நடிக்கும் பெரும்பாலான படங்களில் இவருக்கு பெரிதும் பட வாய்ப்புகள் கிடைத்தன அதன் காரணமாகவே தமிழ் சினிமாவில் தொட முடியாத உச்சத்தை பெற்றார்.தமிழ் சினிமாவில் ஒரு படத்திற்கு அப்பொழுது ஒரு லட்சம் சம்பளம் வாங்கியவர் என்ற பெயரையும் பெற்றார் காமெடி நடிகர் நாகேஷ்.
அப்பொழுது பல சொத்துக்களை சேர்த்து வைத்திருந்த நாகேஷுக்கு ஒரு கட்டத்தில் பல வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால் வாழ்க்கை ஓட்ட வாங்கி வைத்திருந்த சொத்துகளை ஒவ்வொன்றையும் விற்க வேண்டிய சூழலுக்கு ஆளானார்.அவரது மிகப் பெரிய பங்களா ஒன்றை கேஎஸ் ரவிக்குமார் வாங்கினார்.
இவர் அப்போதைய காலகட்டத்தில் கே எஸ் ரவிகுமார் காமெடி நடிகர் நாகேஷ் அவர்களுக்கு உதவியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதை நன்கு புரிந்து கொண்ட கே எஸ் ரவிகுமார் ஒரு கட்டத்தில் அவருக்கு பட வாய்ப்பை அள்ளி கொடுத்து அழகு பார்த்தார்.
அதன் காரணமாகவே 90 காலகட்டத்தில் பல்வேறு கேஎஸ் ரவிக்குமார் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது