இன்று காலை மாரடைப்பு காரணமாக நகைச்சுவை நடிகர் மயில்சாமி அவர்கள் உயிரிழந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை பூர்வீகமாகக் கொண்ட மயில்சாமி அவர்கள் சினிமாவில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்ற தீராத ஆசையினால் சென்னை வந்திருக்கிறார்.
ஆரம்பத்தில் பல துன்பங்களை சந்தித்து இருந்தாலும் ஒரு சில திரைப்படங்களில் யாருக்கும் தெரியாதவாறு வந்து விட்டு சென்று விடுவார் இப்படியே இருந்த மயில் சாமி. அதன் பிறகு ஒரு சில திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரம் கிடைக்கவே நாளடைவில் பெரிய பெரிய நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த வகையில் ரஜினி, கமல், பிரபு, என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகர் மயில்சாமி அதுமட்டுமல்லாமல் நடிகர் விவேக் உடன் இணைந்து நடித்த தூள் படத்தில் இவருடைய காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகர் மயில்சாமி அவர்கள் கடந்த ஆண்டு கொரோனா லாக் டவுனில் தவித்து கிடந்த மக்களுக்கு பல விதமாக உதவி செய்தார் நடிகர் மயில்சாமி.
இதனை தொடர்ந்து நடிகர் மயில்சாமி அவர்கள் கடைசி நிமிடத்தில் கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோவில் இரவு முழுவதும் சிவராத்திரி பூஜையிள் பங்கேற்றார். அதன் பிறகு மயில்சாமி மறுநாள் காலையில் கோவிலில் இருந்து வீடு திரும்பும் போது நெஞ்சு வலிக்குது என்று கூறியிருக்கிறார் அதுமட்டுமல்லாமல் சிறிது நேரத்திலேயே தன்னுடைய சுய நினைவையும் இழந்தார்.
அதை அடுத்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மயில்சாமி மருத்துவர்கள் பரிசோதனை செய்யும்போது அவர் ஏற்கனவே இறந்தது தெரிந்தது மருத்துவர்கள் அவர் இறந்த விட்டார் என்று அறிவித்திருந்தனர். அவரின் மறைவு திரை துறையினரை பெறும் சோகத்தில் ஆழ்த்தியது. ரசிகர்களும் திரைப்படங்களும் மயில்சாமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.