பா. ரஞ்சித் வெளியிட்ட சூப்பர் புகைப்படம்.! சார்பட்டா பரம்பரை படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்ப்பு.! கொண்டாட்டும் சினிமா ரசிகர்கள்.

sarpatta-paramparai

பா ரஞ்சித் இதுவரை பல்வேறு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து இருந்தாலும் அதில் ஒரு சிலரின் ரோல் மட்டுமே உச்சத்தில் இருக்கும் ஆனால் இவர் கடைசியாக இயக்கிய படமான சார்பட்டா பரம்பரை படத்தில் மட்டும் ஹீரோவையும் தாண்டி குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர்களுக்கு மிக அருமையான ரோல் இருந்ததால் இந்த திரைப்படத்தில் எந்த ஒரு சீனும் பார்க்க அருவருப்பு இல்லாமல் கொண்டாடும் வகையில் இருந்தது.

அதனால் தான் இந்த படம் இதுவரை நல்ல விமர்சனத்தையே பெற்று வருவதோடு ரசிகர்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் பலரும் கொண்டாடி தீர்க்கின்றனர்.

இந்த படத்தில் ஆர்யா, பசுபதி, ஜான் கொக்கன், சபீர், ஜான் விஜய், கலையரசன் போன்ற ஒவ்வொரு கேரக்டரின் நடிப்பும் உச்சத்தில் இருந்தது.

இந்த படத்தில் மேலும் நடித்தவர்களுக்கும் நல்ல எதிர்காலமும் சிறப்பான விருதும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அந்தளவிற்கு இந்த திரைப்படத்தில் ஒவ்வொருவரும் தனது முழு திறமையையும் உழைப்பையும் கொடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குத்துச் சண்டை விளையாட்டை  மையபடுத்தி 3 மணி நேரம் சிறப்பாக எடுத்து எடுப்பது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல அதை செய்து காட்டியுள்ளார் பா ரஞ்சித்.

இதனால் தற்போது புகழ்ந்து தள்ளி வருகின்றனர் மேலும் இந்த திரைப்படத்திற்கு தற்போது பல்வேறு விதமான அங்கீகாரங்கள் கிடைக்கின்றன அதில் ஒன்றாக ஒரு புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.

Film companion என்னும் நிறுவனம் சார்பாக சிறந்த படத்திற்காக வழங்கப்படும்  FC GOLD என்கின்ற அங்கீகாரம் சார்பட்டா பரம்பரை படத்திற்கு கிடைத்துள்ளது இந்த தகவலை ரஞ்சித் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இதோ தீயாய் பரவும் புகைப்படம்.

pa ranjith
pa ranjith