பா. ரஞ்சித் இல்லனா.. இப்ப ஜெய்பீம் இல்ல.? நேர்காணலில் உண்மையை சொன்ன நடிகர் சூர்யா.

surya-and-pa-ranjith
surya-and-pa-ranjith

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வருபவர்  நடிகர் சூர்யா. இவர் சமீபகாலமாக படங்களில் நடிப்பதையும் தாண்டி சிறப்பான படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் சூர்யா உருவாக்கி உள்ள 2D என்டர்டைன்மென்ட் நிறுவனம் பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்து வெற்றி கண்டு வருகிறது. இப்படி இது ஓடிக்கொண்டிருக்க சூர்யா தற்போது ஜெய் பீம் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தை ஞானவேல் என்பவர் இயக்கியுள்ளார். இதுவரை இல்லாத கெட்டப்பில் சூர்யா வழக்கறிஞராக நடித்திருப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்த படம் இருளர் இன மக்களுக்காக வாதாடி அவர்களது  வாழ்க்கையை எப்படி மீட்டுத் தருவதை அடிப்படையாகக் கொண்டு படம் உருவாகியுள்ளது.

இந்த படம் நிச்சயம் சூர்யா கேரியரில் ஒரு பெஸ்ட் படமாக இருக்கும் என சமீபத்தில் சூர்யா ஒரு நேர்காணலில் கலந்து கொண்டபோது அப்பொழுது தொகுப்பாளர் கீர்த்தி சூர்யாவிடம் பல்வேறு விதமான கேள்விகளை கேட்டார். அப்பொழுது சூர்யா கூறியது இந்த திரைப்படம் எனது கேரியரில் மிக முக்கியமான படம் வாக்காளர் அட்டை, சாதி சான்றிதழ் எதுவும் இல்லாமல் சென்னையில் அருகே 80 கிலோமீட்டர் தொலைவில் இருளர் இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

1995ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தான் இந்த திரைப்படத்தை உருவாக்கி உள்ளோம் இந்த திரைப்படத்தை உருவாக்கிய இயக்குனர் ஞான வேலுக்கு  மிக்க நன்றி.   இந்த திரைப்படம் ஒரு வழியாக எடுக்கப்பட்டிருந்தாலும் படத்தின் தலைப்பு என்ன வைக்கலாம் என யோசித்துக் கொண்டிருந்தோம் அப்பொழுது எங்களுக்கு ஜெய்பீம் என்ற தலைப்பு வைக்க தோணியது இதை வைக்கலாமென முயற்சித்தோம். அதற்கு முன்பாக இந்த பெயரை ஏற்கனவே ஒருவர் புக் செய்து விட்டார்.

அது வேறு யாருமல்ல சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கிய பா ரஞ்சித் என தெரிய வந்தது உடனே நாங்கள் அவரை அணுகி ஜெய்பீம் என்ற தலைப்பை நாங்கள் வைத்துக் கொள்ளலாமா என கேட்டவுடனே ரஞ்சித் சார் அவர்கள் ஜெய்பீம் எல்லோருக்கும் பொதுவான ஒன்று அதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என அவர் கூறினார். அவர் இல்லை என்றால் தற்போது ஜெய்பீம் பெயர் என்ற பெயர் கிடைத்திருக்காது தற்போது இந்த நேரத்தில் அவருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் என கூறினார் நடிகர் சூர்யா ஜெய் பீம் திரைப்படம் நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என தற்போது சூரிய மற்றும் மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.