கிண்டல் பண்றவன்லாம் ஏண்டா படத்துக்கு வரீங்க..! தியேட்டருக்கும் வெளியில் ஏல்ரையை கூட்டிய கூல் சுரேஷ்..!

cool-suresh-1
cool-suresh-1

தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு. இவ்வாறு பிரபலமான நடிகர் சமீபத்தில் எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்க முடியாமல் பல்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொண்டார் அந்த வகையில் இவரை வைத்து திரைப்படம் இயக்க யோசித்த நிலையில் தற்போது மீண்டும் திரையுலகில்  பழைய சிம்புவாக களம் இறங்கிவிட்டார்.

இந்நிலையில் நடிகர் சிம்பு சமீபத்தில் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இத் திரைப்படமானது நல்ல கதையம்சம் உள்ள திரைப்படமாக அமைந்தாலும் சொல்லும்படி வெற்றி இந்த திரைப்படத்திற்கு கிடைக்கவில்லை.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வெளியான திரைப்படம் தான் மாநாடு இந்த திரைப்படம் பல்வேறு சிக்கல்களை சந்தித்து அதன் பிறகுதான் ரிலீசுக்கு தயாரானது அந்த வகையில் ரிலீஸ் ஆகும் போது கூட  சில பிரச்சினைகள் எழுந்த நிலையில் திரையில் கெத்து காட்டி வருகிறது.

முதலில் இந்த திரைப்படமானது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தான் வெளியாக இருந்தது ஆனால் சில பிரச்சனை எழுந்ததன் காரணமாக இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருந்தனர். இதை தொடர்ந்து இன்று வெளியான திரைப்படத்திற்கான முன்பதிவு டிக்கெட் கூட மிக அதிக அளவு  விற்றுள்ளது.

அந்த அளவில் திரைப்படம் பார்க்க போன பலரும்  இப்படம் வெளியாகததன் காரணமாக பல்வேறு மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் ஆனால் சில நேரத்திலே திரைப்படம் வெளியாகும் என தயாரிப்பாளர் அறிவித்த நிலையில் திரைப்படம் வெளியாகியது.

மேலும் இந்த திரைப்படத்தை பார்க்க தியேட்டருக்கு சிம்புவின் ரசிகர்கள் மற்றும்கூல் சுரேஷ் அவர்கள் சென்று இருந்தார் அப்போது இந்த திரைப்படம் வெளியாக வில்லை என்ற காரணத்தினால் கண்ணீர் விட்டு தியேட்டர் வாசலில் அழுதுள்ளார்.  மேலும் திரைப்படம் வெளியானால் தான் நான் வீட்டுக்கு செல்வேன் எவ்வளவு மழை பெய்தாலும் சரி புயல் அடித்தாலும் சரி இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என பேசியது பலரையும் சிலிர்க்க வைத்துவிட்டது.