தமிழ் சினிமாவில் பல்வேறு டாப் நடிகர்கள் இருந்தாலும் நடிகர் விக்ரமுக்கு என ஒரு தனி கூட்டம் இருக்கிறது ஏனென்றால் படத்தின் கதைக்கு ஏற்றவாறு தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு கதைக்கு ஏற்றபடியே நடிப்பது இவரது ஸ்டைல் அதனால் தான் இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் நல்லதொரு எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
இருப்பினும் சமீபகாலமாக விக்ரம் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் சொல்லிக்கொள்ளும்படி வரவேற்பை பெறாமல் இருப்பதால் தனது திறமையை வெளி காட்டி மீண்டும் ஒரு ஹிட் படத்தை கொடுத்த தற்போது தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் துருவ நட்சத்திரம், கோப்ரா, பொன்னியின் செல்வன், மகான் போன்ற படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
இப்போ விக்ரம் அஜய் ஞானமுத்து இயக்கும் கோப்ரா திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை வெற்றிகரமாக கொடுத்து விட்டு அடுத்து விக்ரம் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சியான் தனது 61வது திரைப் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். அதுவும் பா ரஞ்சித்துடன் விக்ரம் இணைந்துள்ளது.
படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது அண்மையில் பா ரஞ்சித் ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை என்னும் ஒரு உண்மை கதையை மையமாக வைத்து படத்தை எடுத்திருந்தார் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகாமல் OTT தளத்தில் வெளியாகி இருந்தாலும் எதிர்பார்க்காத அளவிற்கு நல்லதொரு வரவேற்பை பெற்று அசத்தியது.
இதனையடுத்து தற்போது விக்ரமுடன் அவர் கை கொடுத்து உள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருப்பதோடு இவர்கள் கூட்டணி செம்மையாக இருக்கும் என்பதே மக்களின் கருத்தாக இருக்கிறது பா ரஞ்சித் மற்றும் விக்ரம் இணையும் இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் அவர்கள் இசையமைக்க இருக்கிறார்.