தற்பொழுதெல்லாம் திரைப்படங்கள் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் சீரியல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.இதன் காரணமாக தொடர்ந்து ஒட்டுமொத்த தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்கள் அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.அந்த வகையில் சீரியல்கள் ஒளிபரப்புவதில் சன்,விஜய், ஜி தமிழ் மற்றும் கலர்ஸ் தமிழ் இந்த நான்கு சேனல்களும் முதல் நான்கு இடங்களை பெற்றுள்ளது.
அந்த வகையில் முக்கியமாக ஒரு சில சீரியல்கள் மிகவும் வித்தியாசமாக இருந்து வரும் நிலையில் தற்போது கலர்ஸ் தமிழ் தங்களுடைய டிஆர்பி-யை ஏற்ற வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் கலர்ஸ் தமிழில் நாள்தோறும் இரவு 8:30 மணிக்கு திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் கண்ட நாள் முதல்.
இந்த சீரியல் சமீப காலங்களாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில் தற்பொழுது விஜயின் என்னங்க பயமா இருக்கா இனிமேல்தான் பயங்கரமாக இருக்கும் என்ற டயலாக் பயன்படுத்தப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து கோவிலில் ஏராளமான குழந்தைகள் மற்றும் பெண்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு வருகிறார்கள்.
அவர்களுள் ஒருவராக இருக்கும் கான்ஸ்டபிள் குமரன் அவர்களை தும்சம் செய்வதாகவும் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் பீஸ்ட் படத்தில் இதே போல தீவிரவாதிகளிடம் சிக்கும் பொதுமக்களை விஜய் காப்பாற்றுவதாக கதை இருக்கும் நிலையில் அதேபோல் கான்செப்டை தற்பொழுது கண்ட நாள் முதல் சீரியலில் பயன்படுத்தி வருகிறார்கள்.
மேலும் அதேபோல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலும் பீஸ்ட் படத்தின் காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது பாரதி கண்ணம்மா பணியாற்றி வரும் மருத்துவமனையில் அமைச்சர் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த மருத்துவமனையவே தீவிரவாதிகள் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வர வைத்தார்கள்.
மேலும் அதில் இருந்து அனைவரையும் பாரதி கண்ணம்மா இருவரும் இணைந்து காப்பாற்றியுள்ளார்கள் இவ்வாறு தொடர்ந்து அனைத்து தொலைக்காட்சிகளும் திரைப்படங்களின் கதை மையமாக வைத்து சீரியல்களை உருவாக்கி வருகிறது. இதன் காரணமாக ரசிகர்கள் அனைத்து சீரியல்களையும் பங்கமாக கலாய்த்து வருகிறார்கள்.