குறைந்து கொண்டே போகும் “கோப்ரா” படத்தின் வசூல் – 3 நாள் முடிவில் மட்டும் இத்தனை கோடியா.?

cobra
cobra

நடிப்பிற்கு பெயர் போன சியான் விக்ரம் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் இவர் எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்காக தனது உடல் எடையை ஏற்றியோ குறைத்தோ மாற்றி அமைத்து அந்த கதாபாத்திரமாக  வாழ்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

இதனால் இவரது படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட் தான். இருப்பினும் அண்மை காலமாக இவர் நடத்தப்படங்கள் தோல்வியை படங்களாக அமைந்தன அதிலிருந்து மீண்டு வர சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்தார். அந்த வகையில் அஜய் ஞானமுமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்த திரைப்படம் தான் கோப்ரா.

இந்த படத்தில் விக்ரம் ஒன்பது விதமான கெட்டப்புகளில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தார். இந்த படத்தில் அவருடன் கைகோர்த்து ஸ்ரீநிதி ஷெட்டி, ரோபோ சங்கர், கே எஸ் ரவிக்குமார், பாபு ஆண்டனி, மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி, ரவீனா ரவி, மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் பல நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்தனர்.

இந்த படம் வெளியாகி தற்போது மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. இருப்பின்னும் இந்த படத்தின் நேரம் அதிகமாக இருந்தது. ரசிகர்களை  சற்று சலப்படைய செய்தது இதை அறிந்த படக்குழு தற்பொழுது அந்த படத்தில் இருந்து 20 நிமிட காட்சிகளை குறைத்து  உள்ளது.

தற்போது இந்த படம் ஆக்ஷன்க்கு பஞ்சம் இல்லாமல் சூப்பராக இருப்பதால் ரசிகர்களை விரைவாக கவர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் மூன்று நாள் முடிவில் அள்ளிய  வசூல் எவ்வளவு என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் மூன்று நாட்களில் மட்டுமே 35 கோடி வசூல் செய்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகின்ற நாட்கள் சனி, ஞாயிறு என்பதல் இந்த படம்  இன்னும் சில கோடிகளை அள்ளி அசத்தும் என தெரிய வருகிறது.