பட்டி தொட்டி எங்கும் வசூல் வேட்டையாடும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் – 3 நாள் முடிவில் மட்டுமே இத்தனை கோடியா.?

prince
prince

சினிமா உலகில் இருக்கும் ஒவ்வொரு ஹீரோவும் தனக்கு என்ன வருமோ அதை சரியாக பயன்படுத்தினாலே வெற்றியை ருசிக்கலாம். அதை ஒரு சில நடிகர்கள் சரியாக செய்கின்றனர் அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் காமெடி கலந்த படங்களில் நடித்து தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அசத்துகிறார்.

இதனால் அவரது மார்க்கெட்டும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர், டான் ஆகிய படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது அதனைத் தொடர்ந்து இப்பொழுது இவர் நடித்துள்ள திரைப்படம் பிரின்ஸ்.. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கியிருந்தார்.

சிவகார்த்திகேயன் உடன் கைகோர்த்து சத்யராஜ், உக்கரை நாட்டு நடிகை மரியா, சூரி, பிரேம்ஜி கங்கை அமரன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த  21 ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. பிரின்ஸ் படம் காமெடி மற்றும் லவ் கலந்த ஒரு படமாக இருப்பதால் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது.

இருப்பினும் கலவையான விமர்சனத்தை பெற்று படம் ஓடிக் கொண்டிருக்கிறது. முதல் நாளில் நல்ல வசூலை அள்ளி இந்த திரைப்படம் இரண்டாவது நாளிலும் கணிசமான வசூலை அள்ளியது இப்படி இருக்கின்ற நிலையில் மூன்று நாள் முடிவில் சிவகார்த்திகேயனின்  பிரின்ஸ் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்து இருக்கிறது.

அதன்படி பார்க்கையில் இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் இதுவரை சுமார் 17 கோடி வரை வசூலித்து இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன வருகின்றன. வருகின்ற நாட்களில் இந்த படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என தெரிய வருகிறது இதனால் பட குழுவும் சரி, சிவகார்த்திகேயனும் சரி செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.