தமிழ் சினிமா உலகில் இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் முதலில் இசையமைப்பாளராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் பிறகு நடிகராக தன் திறமையை வெளிப்படுத்தினார் முதலில் நான் என்னும் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கைதட்டல் வாங்கினார்.
அதனைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் ஏராளமாக குவிந்தன. அந்த வகையில் சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் என அடுத்தடுத்த பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்ததால் இவருடைய வெற்றி சதவீதம் நாளுக்கு நாள் அதிகரித்தது தற்பொழுது கூட பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி நடித்திருந்தார்.
இந்த படம் அண்மையில் வெளிவந்தது பிச்சைக்காரன் 2 படத்தில் விஜய் ஆண்டனி உடன் கைகோர்த்து kavya thapa, ஜான் விஜய், யோகி பாபு, ஒய் ஜி மகேந்திரன், dev gill மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர். படம் முழுக்க முழுக்க ஆக்சன், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த ஒரு படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடியதோடு மட்டுமல்லாமல் வசூலிலும் மாஸ் காட்டியது.
இதுவரை இந்த திரைப்படம் 35 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்பொழுது பிச்சைக்காரன் 2 திரைப்படம் விஜய் ஆண்டனிக்கு இதுவரை எவ்வளவு லாபத்தை கொடுத்துள்ளது என்பது குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் 15 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் தற்பொழுது 35 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
இதன் மூலம் பிச்சைக்காரன் 2 திரைப்படம் 20 கோடிக்கு மேல் லாபம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன வருகின்ற நாட்களிலும் பிச்சைக்காரன் படம் மிகப்பெரிய லாபத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது இதனால் விஜய் ஆண்டனி செம்ம சந்தோஷத்தில் இருக்கிறார் ஏற்கனவே இந்த வெற்றியை பிச்சைக்காரர்களுடன் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.