நடிகர் கார்த்தி நடிப்பில் கடைசியாக சுல்தான் திரைப்படம் வெளியாகியது. இந்த படம் சுமாரான வரவேற்பு பெற்று இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து கார்த்தி விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் ஆகிய மூன்று படங்களில் நடித்து வந்த நிலையில் முதலில் விருமன் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி திரையரங்கில் வெளியானது.
இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்கியிருந்தார் மற்றும் கார்த்தியின் அண்ணன் சூர்யாவின் 2d என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் கார்த்தி உடன் முதல் முறையாக ஹீரோயினாக அதிதி ஷங்கர் அறிமுகமாகியுள்ளார் மற்றும் சரண்யா பொன்வண்ணன், சூரி, பிரகாஷ்ராஜ் போன்ற பல நடிகர் நடிகைகளும் படத்தில் சிறப்பாக நடித்து அசத்திருந்தனர்.
நடிகர் கார்த்தி கிராமத்து கதைகளில் இதற்கு முன் பருத்திவீரன் கொம்பன் போன்ற பல படங்களில் சிறப்பாக நடித்து அசத்தியிருந்தார் அதே சாயலில் உருவாகி உள்ள விருமன் திரைப்படத்திலும் கார்த்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் மற்றும் அறிமுக நாயகி அதிதி சங்கரும் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளார்.
விருமன் திரைப்படம் வெளியாகிய நாட்களில் இருந்து இதுவரை மற்ற டாப் ஹீரோக்களின் படங்கள் எதுவும் வெளி வராததால் நல்ல வசூல் வேட்டை நடத்தி வந்தன. அண்மையில் கூட விருமன் படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது அதில் பட குழு பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் விருமன் திரைப்படம் ஆறு நாள் முடிவில் சென்னையில் மட்டும் 1.8 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது. இது இந்த படத்திற்கு நல்ல வசூல் என பார்க்கப்படுகிறது ஆனால் இன்று தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி உள்ளதால் அடுத்தடுத்த நாட்களில் கார்த்தியின் விருமன் படத்தின் வசூல் குறைய அதிக வாய்ப்பு உள்ளது.