வசூலில் படுதோல்வி அடைந்த “காபி வித் காதல்” – 4 நாட்கள் முடிவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

coffee with kadhal
coffee with kadhal

இயக்குனர் சுந்தர் சி தமிழ் சினிமா உலகில் இருக்கும் டாப் நடிகர்களான ரஜினி, அஜித் போன்ற நடிகர்களை வைத்து வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் ஆனால் அண்மை காலமாக இவர் இயக்கம் படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தோற்கின்றன..

அதை சரி செய்ய  இயக்குனர் சுந்தர் சி அடுத்தடுத்த படங்களை இயக்கி வருகிறார் அந்த வகையில் இந்த மாதத்தில் கடந்த நான்காம் தேதி சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த காபி வித் காதல் திரைப்படமும்  கலவையான விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக தோல்வியை கண்டு இருக்கிறது.

படம் முழுக்க முழுக்க காதல் காமெடி போன்றவை அதிகம் இடம் பெற்று இருந்தன இது பழக்கப்பட்ட ஒரு கதையாக இருந்ததால் மக்கள் மத்தியில் இது கவர்ந்து இழுக்கவில்லை அதன் காரணமாக  படம் எதிர்பார்த்த வசூலை அள்ளவில்லை என ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. இந்த படத்தில்  ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய்,யோகி பாபு..

மற்றும்  டிடி என்கின்ற திவ்யதர்ஷினி, மாளவிகா சர்மா, ஐஸ்வர்யா தாத்தா, அமிர்த அய்யர் சம்யுக்தா, பிரதாப் போதன் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்களுக்கான மார்க்கெட் நாளுக்கு நாள் குறைந்துள்ளது.

அதனால் கூட ரசிகர்கள் இவர்களது படத்தை பார்க்க வரவில்லை எனவும் கூறப்படுகிறது இந்த திரைப்படம் 4 நாள் முடிவில் மட்டுமே ஒட்டுமொத்தமாக சுமார் 5 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது வருகின்ற நாட்களில் இந்த படம் நன்றாக ஓடினாலும் கூட படக்குழு எதிர்பார்க்கும் வசூலை அள்ள முடியாது என கூறப்படுகிறது.