1970-80களில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் சீனிவாசன்.இவர் கல் மனம் என்னும் நாடகம் ஒன்றில் தேங்காய் வியாபாரியாக நடித்ததால் அதில் இருந்த அனைவரும் தேங்காய் சீனிவாசன் என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.
இவர் நகைச்சுவை நடிகர்,கதையின் கதாநாயகன், எதிர் கதாநாயகன்,குணச்சித்திர நடிகர் என பன்முகத் தன்மைகளை கொண்டவர்.
இவருடைய உயிர் நண்பர் ஜெயசந்திரன் எனவே அவரது 80 சதவீத படத்தில் தேங்காய் சீனிவாசன் நடித்திருப்பவர். நடிகராக நடித்துவந்த தேங்காய் சீனிவாசன் படங்கள் தயாரிப்பதிலும் ஆர்வம் வந்ததால் சில படங்களை தயாரித்தார்.
அந்த வகையில் இவர் தயாரித்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் வந்தான் திரைப் படத்தின் படப்பிடிப்பின்போது பாதியிலேயே பணம் பற்றாக்குறையால் நிறுத்தப்பட்டது. இதில் மிகவும் ஆர்வம் வந்ததால் தேங்காய் சீனிவாசன் பல லட்சங்களை இழந்தார்.
பண பற்றாக்குறை மிகவும் ஏற்பட்டதால் நடுரோட்டில் வருமளவிற்கு சீனிவாசனின் நிலைமை வந்துவிட்டது. எனவே நடிகர் எம்ஜிஆரை சந்தித்த பணம் கேட்டுள்ளார். அதற்கு எம்ஜிஆர் எவ்வளவோ சொன்னேன் நீ கேட்கவே இல்லை என்று திட்டி அனுப்பிவிட்டாராம்.
பிறகு எம்ஜிஆர் உடனடியாக 25 லட்சம் ரூபாய் பணத்தை சீனிவாசனிடம் சொல்லாமலே அவர் வீட்டில் போய் தந்துவிட்டாராம். நடிகர் சீனிவாசன் எம்.ஜி.ஆர்வுடனே இவ்வளவு நெருக்கமான நண்பராக இருந்துள்ளார்.
பிறகு சீனிவாசன் மூளை குருதிப்பெருக்கு காரணமாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்பு சிகிச்சை பலன்றி 1957ஆம் ஆண்டு தனது ஐம்பதாவது வயதில் காலமானார்.