அக்டோபர் 21, 1937ஆம் ஆண்டில் சீனிவாசன் பிறந்தார்.இவர் தமிழ் சினிமாவில் அவரது தந்தை போலவே அவரும் நடிகர் ஆகணும் என்று ஆசை இருந்தது. அவரது தந்தை எழுதிய ‘கலாட்டா கல்யாணம்’ நாடகத்தில் நடித்து அறிமுகமானார் சீனிவாசன்.
அதன் பிறகு கே கண்ணனின் கல்மணம் நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக நடித்திருந்தார் அந்த நாடகத்தைப் பார்க்க வந்த கே ஏ தங்கவேலு இவரை எல்லோரும் தேங்காய் சீனிவாசன் என்றே அழைக்க வேண்டும் என்று கூறினார் அதிலிருந்து அவர் பெயர் தேங்காய் சீனிவாசன் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார்.
சீனிவாசன் ‘ஒரு விரல்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர் கோ இராமச்சந்திரன்,சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மனதைக் கவர்ந்து விட்டார்.
இவர் நடித்தது மட்டுமல்லாமல் சிவாஜியை வைத்து ‘கிருஷ்ணன் வந்தான்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அந்த திரைப்படம் அவருக்கு நல்ல வசூலையும் நல்ல பாராட்டுக்களையும் குவித்தது. இவர் நகைச்சுவையாக நடிப்பது மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் பேர் போனவர் என்றுதான் கூறவேண்டும்.
இவர் இதுவரை சுமார் 900 திரைப்படங்களில் நடித்துள்ளார் இந்த சாதனையை யாராலும் இதுவரை முறியடிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள். இவர் இப்போ மண்ணில் இல்லை என்றாலும் இவரை பற்றி ரசிகர்கள் அனைவரும் நாளுக்கு நாள் பேசி கொண்டேதான் வருகிறார்கள்.