பிரபல நடிகை ஆர்டர் செய்து வாங்கிய உணவில் கரப்பான் பூச்சி.! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

food

ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இத்திரைப்படத்தின் மூலம் இவர் பிரபலமடைந்ததால் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்து வாய்ப்பு கிடைத்தது. அந்தவகையில் என் மனசு தங்கம்,டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்க தமிழன் உள்ளிட்ட இன்னும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

இவ்வாறு தமிழ் சினிமாவில் பிரபலமடைந்துள்ள இவர் தற்போது தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்தவகையில் தெலுங்கில் விரட்ட பருவம், பாகை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இதனைத் தொடர்ந்து தமிழில் பொன்னின் செல்வன், பார்ட்டி ஆகிய திரைப்படங்களில் நடித்து திரைவுலகில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

தற்பொழுது லாக் டவுன் என்பதால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிவேதா பெத்துராஜ் தனது மன அழுத்தத்தை குறைப்பதற்காக தொடர்ந்து சோசியல் மீடியாக்களில் தனது புகைப்படங்கள் வெளியிடுவது மற்றும் தனது திரைப்படத்தின் பற்றிய அப்டேட்டுகள் வெளியிடுவது என்று மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

nivetha

இப்படிப்பட்ட நிலையில் தற்போது நிவேதா பெத்துராஜ் தனது இன்ஸ்டா ஸ்டோரில் ஒரு உணவு புகைப்படத்தை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அதாவது நிவேதா பெத்துராஜ் சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் ஃப்ரைட் ரைஸ் ஆர்டர் செய்துள்ளார்.

food

ஆனால் அதில் கரப்பான் பூச்சி கிடந்துள்ளது அதனை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டா ஸ்டோரில் பதிவிட்டு அதில் இது முதன் முறையல்ல இப்படிப்பட்ட ஹோட்டல் நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி புகைப்படத்தை ஷேர்   செய்துள்ளார்.