வெள்ளித்திரையில் தனது ரசிகர்களுக்கு மிகவும் நல்ல திரைப்படத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக நல்ல கதை அம்சத்தை கொண்ட திரைப்படங்களில் நடித்து வருபவர் தான் சியான் விக்ரம்.
இவரது நடிப்பில் வெளியான எல்லா திரைப்படங்களும் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது பலருக்கும் தெரியும் மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த சாமி,அருள்,கடாரம் கொண்டான்,கந்தசாமி போன்ற பல திரைப்படங்கள் இவர் ரசிகர்களிடையே மிகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதனையடுத்து விக்ரம் தற்போது கோப்ரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலகி வந்ததை நாம் பார்த்திருப்போம்.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டீசர் தற்பொழுது சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி இவரது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
இந்த டீசரை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் இந்த படம் செம ஹிட் அடிக்க போகிறது என கூறி வருவது மட்டுமல்லாமல் இந்த டீசரை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
இதோ அந்த டீசர்.