நடிகர் விக்ரம் தமிழ் சினிமா உலகில் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக ஓடிக் கொண்டிருக்கிறார் இவர் கடைசியாக நடித்த ஒரு சில படங்கள் தோல்வி படங்களாக மாறியதால் அதிலிருந்து மீளா நடிகர் விக்ரம் சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து நடித்து வருகிறார். அதில் முதலாவதாக அஜய் ஞானமுத்துடன் கைகோர்த்து விக்ரம் நடித்த திரைப்படம் தான் கோப்ரா.
இந்த படம் ஆக்ஷன் சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த ஒரு திரைப்படமாக உருவாகியது படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று சூப்பராக ஓடிக்கொண்டிருக்கிறது இந்த படத்தில் விக்ரம் ஒன்பது விதமான கெட்டப்புகளில் நடித்து அசத்தி உள்ளார்
அவருடன் கைகோர்த்து ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, மியா சார்ஜ், ரோபோ ஷங்கர், பாபு ஆண்டனி, கே எஸ் ரவிக்குமார், ரவீனா ரவி, மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்தனர். இந்த படம் முதல் நாளே கோடிக்கணக்கில் வசூலை பார்த்தது அடுத்தடுத்த நாட்களிலும் நல்ல வசூலை அள்ளுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில்..
ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து கலவையான விமர்சனத்தை பெறுவதால் இந்த படத்தின் வசூலும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் கோப்ரா திரைப்படம் நான்கு நாட்கள் முடிவில் அள்ளிய வசூல் எவ்வளவு என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி பார்க்கையில் நான்கு நாட்கள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே இந்த திரைப்படம் இதுவரை 25 கோடி தான் வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் விக்ரமின் கோப்ரா திரைப்படம் கணிசமான ஒரு தொகையை அள்ளித்தான் நிற்கும் என சினிமா வட்டாரங்கள் பலரும் கூறுகின்றனர். இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.