தமிழ் சினிமா உலகில் எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே நடிப்பதற்கு பதிலாக வாழ்வார்கள் அந்த வகையில் சிவாஜி, கமல் ஆகியோர்கள் அடுத்தபடியாக எந்த மாதிரியான ரோல் கொடுத்தாலும் பின்னி பெடல் எடுக்க கூடியவர் சியான் விக்ரம்.
இவர் தனது சினிமா பயணத்தை ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் ஒவ்வொரு படத்திற்காகவும் மெனக்கெட்டு நடித்து வருகிறார் இவரது நடிப்பு திறமையை பார்ப்பதற்கே ரசிகர்கள் மக்களும் திரையரங்கையில் நாடுவார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் இருப்பினும் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படங்கள்..
பெரும்பாலும் தோல்வி படங்களாக அமைந்தன அதிலிருந்து மீண்டு வர சிறந்த இயக்குனர்களுடன் கதை கேட்டு நடித்துள்ளார் அந்த வகையில் விக்ரம் கையில் தற்பொழுது பொன்னியின் செல்வன், கோப்ரா மற்றும் பெயிரிடப்படாத ஒரு சில படங்கள் இருக்கின்றன.. அதில் முதலாவதாக வருகின்ற ஆகஸ்ட் 31ஆம் தேதி சீயான் விக்ரமின் கோப்ரா திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தை அஜய் ஞானமுத்து தனக்கே ஊறிய பாணியில் எடுத்து உள்ளார் இவர் இதுவரை டிமான்ட்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கி வெற்றி கண்டுள்ளார் தற்பொழுது நடிகர் விக்ரமை வைத்து கோப்ரா படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விக்ரமுடன் கைகோர்த்து இர்ஃபான் பாதன், ஸ்ரீநிதி ரெட்டி, ரோஷன் மேத்யூ, மீனாட்சி கோவிந்தராஜன், கே எஸ் ரவிக்கு
மார், மீயா ஜார்ஜ், பாபு ஆண்டனி, ரவீனா ரவி மற்றும் பலர் நடித்தி அசத்தி உள்ளனர். இந்த படத்தில் நடிகர் விக்ரம் பல்வேறு விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் நடிப்பதற்கு வாழ்ந்து இருக்கிறார் அதை வெளிக்காட்டும் வகையில் தற்பொழுது இந்த படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இதோ நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் கோப்ரா படத்தின் டிரைலர் வீடியோ..