நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் இவர் அண்மை காலமாக நடித்த படங்கள் தோல்வி படங்களாக மாறியதால் அதிலிருந்து மீண்டும் வர சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து நடித்து வருகிறார் அதில் முதலாவதாக அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான கோப்ரா திரைப்படம்.
நேற்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் விக்ரமுடன் கைகோர்த்து ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பாதன், ரோபோ ஷங்கர், கே எஸ் ரவிக்குமார், பாபு ஆண்டனி, மீயா ஜார்ஜி, மிருணாளினி ரவி, மீனாட்சி கோவிந்தராஜன், ரவீனா ரவி, கனிகா, ஆனந்தராஜ் மற்றும் பல முன்னணி பிரபலங்கள் இந்த படத்தில் சூப்பராக நடித்தனர்.
படம் தற்பொழுது வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் மூன்று வினாடி 3 நொடிகள் ஆனால் படம் ரொம்ப நீளமாக இருப்பாதால் ரசிகர்களை சற்று கடுப்பாகியது படத்தை இன்னும் கொஞ்சம் ட்ரிம் பண்ணி இருந்தால் கோப்ரா படம்.
விக்ரம் கேரியரில் இது ஒரு மிகப்பெரிய ஒரு வெற்றிப் படம் என ரசிகர்கள் முதல் நாளே தனது குறைகளை சொல்லி வந்தனர். இதை அறிந்து கொண்ட கோப்ரா படக்குழு தற்பொழுது திரையரங்கு பக்கம் ரசிகர்களையும் மக்களையும் கவர்ந்து இழுக்க ஒரு புதிய வேலையை செய்துள்ளது.
அதாவது கோப்ரா திரைப்படத்திலிருந்து 20 நிமிட காட்சி வரை குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களில் விமர்சனம் கேட்டுவிட்டு உடனே படக் குழு இப்படி செய்தது படத்திற்கு பிளஸ் ஆக பார்க்கப்படுவதாக பலரும் கூறி வருகின்றனர். இது ஒரு நல்ல மூவி தான் எனவும் கூறியும் வருகின்றனர். இச்செய்தி இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.