நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான அல வாய்க்குனந்தபுரமுலோ என்ற திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகி இந்த திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில் இதற்கு இயக்குனர் தமன் அவர்கள் தான் இசையமைத்திருந்தார்.
மேலும் இசையமைப்பாளர் தமன் அவர்கள் சமீபத்தில் வாரிசு திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு இசையமைத்துள்ளார் இன் நிலையில் பல பேட்டியில் தமன் பேசி இருந்த பொழுது அவர் கூறியது என்னவென்றால் என்னுடைய வாழ்நாளில் தளபதி விஜய்க்கு இசையமைப்பது தான் தன்னுடைய கனவு என்று கூறியிருந்தார்.
அந்த வகையில் வாரிசு திரைப்படத்தில் இவர் இசையமைத்த ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ற பாடல் மற்றும் தீ தளபதி இரண்டு பாடல்களுமே மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் தற்பொழுது சமூக வலைதள பக்கத்தில் இந்த பாடல்கள் அனைத்தும் ட்ரெண்டிங்கில் உள்ளது.
இதனை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படத்தின் ஆடியோ லாஞ்சில் இசையமைப்பாளர் தமன் அவர்கள் உரக்கமான பேச்சின் மூலமாக ரசிகர்களை நெகழ்ச்சி அடைய வைத்தது மட்டும் இல்லாமல் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு புது பொண்ணு கிடைச்சா மற்றும் போக்கிரி பொங்கல் ஆகிய பல்வேறு பாடல்களில் நான் விஜய் உடன் பணியாற்றி உள்ளேன் அந்த வகையில் 27 வருடங்கள் காத்திருந்த நிலையில் தற்பொழுது வாரிசு திரைப்படத்தில் இணைவதற்கான வாய்ப்பு கிடைத்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான இசை பணி ஆரம்பித்த நாளிலிருந்து என்னுடைய மகன் பத்தாம் வகுப்பு படிக்கிறான் தினமும் என்னிடம் கேட்கும் ஒரு கேள்வி என்னவென்றால் எப்படி மியூசிக் போட்டு உள்ளீர்கள் ஒழுங்கா நல்லா மியூசிக் போடு என்று கூறுவார்.
மேலும் தமன் அவர்கள் இந்தியாவில் ஆதார் கார்டு எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல விஜய் படத்துக்கு இசையமைப்பது முக்கியம் மேலும் இந்த படத்திற்காக ஆறு டியூன்கள் உருவாக்கியதாகவும் அதில் ஆப்ஷன் டியூன்களை போடவில்லை இன்று கூறியது மட்டுமில்லாமல் ஆறு பாடல்களுமே மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார் மேலும் நான் சென்னையில் பிறந்து வளர்ந்ததற்கு இன்று தான் தேவைப்படுகிறேன் என்றும் தன்னுடைய வாழ்க்கை முழுமை அடைந்ததாகவும் தமன் அவர்கள் கூறியது மெய்சிலிர்க்க வைத்துள்ளது.