“விஸ்வாசம்” படத்தின் ஷூட்டிங் ஸ்பார்டில் நடந்த ஒரு சூப்பரான நிகழ்வை பகிர்ந்த ஒளிப்பதிவாளர் வெற்றி.! கொண்டாத்தில் தல ரசிகர்கள்.

ajith-and-vetri
ajith-and-vetri

சினிமா உலகில் இருக்கின்ற நடிகர்கள் தனது கதாபாத்திரங்களை முடித்த பிறகு ஓய்வு எடுப்பது வழக்கம் ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவராக இருப்பவர் தான். தல அஜித் தன்னுடன் பணியாற்றும் பிரபலங்களுக்கு அந்த சூட்டிங் ஸ்பாட்டிலேயே அமர்ந்து அவர்களின் நடிப்பை பார்ப்பார்.

அவர்களுக்கு ஏதாவது சாப்பாடு செய்து தருவது அல்லது ஏதேனும் புதிய வேலைகளை செய்து வருவது அஜித்தின் பழக்கமாக இருந்துள்ளது. அந்த வகையில் விசுவாசம் படத்தில் நடந்த சில சம்பவங்களை ஒளிப்பதிவாளர் வெற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் கூறியது : விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு காலையில் தொடங்கி விடிய விடிய நடந்து முடியும்.

படக்குழுவினர் சிலர் ஒரு ஹோட்டலுக்கு போய் பொங்கல் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். இதை அறிந்து கொண்ட அஜித் மறுநாள் அவர்களுக்காக அதிகாலையிலேயே எழுந்து பொங்கல் சமைத்து மற்றவர்களுக்கு பரிமாறினார் அதுவே எங்களை வியப்பில் ஆழ்த்தியது.

மேலும் சண்டை காட்சிகளில் நடிக்கும் போது டூப் நடிகர்களை அவர் பயன்படுத்தியதில்லை. காரணம் எனக்கு நடப்பதுதானே அவர்களுக்கும் நடக்கும் என்று கூறி விளக்கம் கொடுத்து எல்லோரும் நல்லா இருக்கணும் என்று அஜித் விரும்புபவர் பேசி முடித்தார் ஒளிப்பதிவாளர் வெற்றி.

அஜித் நடிப்பில் தற்போது கூட வலிமை திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது இந்த திரைப்படத்தை ரசிகர்கள் தொடங்கிய சினிமா பிரபலங்களும் பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர்.