சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் தனது பிடித்த விஷயங்களை செய்ய முகமூடி, தொப்பியை அணிந்து மறைமுகமாக பொது இடத்திற்கு வருகின்றனர். அந்த வகையில் பல நட்சத்திர பிரபலங்களுக்கு கிரிக்கெட் ரொம்பவே பிடிக்கும் அதன்படி இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் சீசன் கோலாகலமாக நடத்தப்படுகிறது.
அதன்படி ஐபிஎல் 16 வது சீசன் கடந்த மார்ச் 31 ஆம் தேதி கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மேட்ச்கள் விறுவிறுப்பாக போய்கொண்டு இருக்கிறது. அதன்படி சிஎஸ்கே அணி இரண்டாவது போட்டியில் லக்னோ அணியை எதிர்த்து சென்னையில் நேற்று பலப்பரீட்சை நடத்தியது. டாஸ் வென்ற லக்னோ அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி சென்னை அணியின் துவக்க வீரர்களாக ருத்ராஜ் மற்றும் கான்வே களம் இறங்கினர் ஆரம்பத்திலேயே அதிரடியான ஆட்டத்தை அவர்கள் கொடுக்க அதன் பின் வந்தவர்களும் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தின இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருவது ஓவர்களில் 217 ரன்கள் எடுத்தது அதன் பிறகு களம் கண்ட லக்னோ ஆரம்பத்தில் அதிரடியான ஆட்டத்தை கொடுத்தாலும் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்தது.
இதன் மூலம் சென்னை அணி 12 ரன் வித்தியாசத்தில் போட்டியை கைப்பற்றியது இந்த போட்டி பரபரப்பாக இருந்தது இந்த போட்டியை காண பல ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் வந்திருந்தனர் குறிப்பாக தமிழ் சினிமா பிரபலங்களான தனுஷ், ஹரிஷ் கல்யாண், சிவகார்த்திகேயன், சதீஷ், கீர்த்தி சுரேஷ் போன்ற பலரும் வந்திருந்தனர் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதள பக்கங்களில் காட்டு தீ போல பரவி வருகின்றன.
Our celebs at Chepauk stadium to watch out the blasting match of #CSK 💥💛
Missing thalapathy @actorvijay#IPL2023 #Yellove #Leo pic.twitter.com/p4KLANnYSn— JAI (@itz_jaiTheri) April 3, 2023
இதைப் பார்த்த ரசிகர்கள் சிஎஸ்கே மேட்சை பார்க்க இவ்வளவு பேர் வந்திருக்கிறீர்களா எனக் கூறி புகைப்படத்திற்கு லைக்குகளை தட்டி விட்டு கமெண்ட்டுகளை கொடுத்து வருகின்றன இதோ நட்சத்திர பிரபலங்கள் சிஎஸ்கே மேட்சை பார்க்க வந்த பொழுது எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை நீங்களே பாருங்கள்.
Dhanush at CSK match!
— Christopher Kanagaraj (@Chrissuccess) April 4, 2023
Harish Kalyan at Stadium watching CSK Match. pic.twitter.com/1vWErZII44
— Christopher Kanagaraj (@Chrissuccess) April 3, 2023