சினிமா என்னுடைய அழகை தான் பார்த்தது.. எனது ஆசையை நிறைவேற்றவில்லை -சில்க் ஸ்மிதா.?

silk-sumitha-
silk-sumitha-

தென்னிந்திய சினிமா உலகில் பல்வேறு படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தவர்  சில்க் ஸ்மிதா. இவர் இப்பொழுது இல்லை என்றாலும் இவரை பற்றிய செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கிறது. இளவரசன்,ஆவாரம்பூ உள்பட பல படங்களில் கிளாமர் ரோல்களில் நடித்து பிரபலமடைந்தவர் ஷர்மிலி.

சில்க் ஸ்மிதா குறித்து இப்போது ஷர்மிலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் அதில் அவர் சொன்னது : கிளாமர் ரோலில் நடிக்கும் போது வீட்டில் என்ன நினைப்பார்கள் என்ற தயக்கமும் இருந்தது எனக்கு மட்டுமல்ல எல்லா பெண்களுக்குமே இப்படித்தான் நான் சில்க் ஸ்மிதாவை அக்கா என செல்லமாக அழைப்பேன். ஒரு முறை அவருடன் நடிக்கும் போது இப்படி குட்டி குட்டி டிரஸ் போட்டுக்கிட்டு நடிக்க உங்களுக்கு கூச்சமா இல்லையா என கேட்டேன்.

அதற்கு அவர் எனக்கு இழுத்து போர்த்திக் கொண்டு நடிக்க தான் தாண்டி ஆசை எவன் கூப்பிடறான் என பேசினார். அப்பொழுது அவர் எவ்வளவு பீல் பண்ணி அவர் சொல்லி இருப்பார் என இப்போ என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. சில்க் சுமிதா அக்காவுக்கு பட்டு புடவை கட்டிக்கொண்டு நடிக்க அவ்வளவு ஆசை ஆனால் அது நடக்காத காரணத்தினால் ஷூட்டிங் இல்லாத சமயத்தில்.

பட்டு புடவை கட்டிக்கொண்டு தலை நிறைய பூ வைத்து நகைகளை அள்ளி மாட்டிக் கொண்டு வீட்டிலேயே இருந்து தன்னை அழகாக பார்த்துக் கொள்வார். மேலும் அவர் சொன்னது ஆச்சரியமா இருந்தது சில படங்களில் அவர் சேலையை கட்டி இருந்தாலும்கூட அதுவும் கவர்ச்சியாகத் தான் இருக்கும். அவர் மாதிரி அழகை பராமரிக்க கூடியவர்கள்  ஹாலிவுட்டில் கூட இருக்கமாட்டார்கள்.

ஒரு தெலுங்கு பட ஷூட்டிங்கில் இருந்த பொழுது அக்கா சாப்பிட்டீர்களா என்று நாலு பாதாம் பருப்பு சாப்பிட்டேன் என்றார் சாப்பாடு சாப்பிட்ட பின் பாதாம் பருப்பு சாப்டீங்களா.. எனக் கேட்டேன்  இல்லை வெறும் 4 பாதாம் பருப்பு தான் சாப்பிட்டேன் என்ன ஆச்சரியப்படுத்தினார் நல்ல சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு அதிகம் சாப்பிட்டால் வயிறு வந்து விடும் என்ற காரணத்தினால் சாப்பிடாமல் இருக்கிறேன் என கூறினார்.