விவாகரத்துக்குப் பின் சீரழிந்த சினிமா வாழ்க்கை..! கனா காணும் காலங்கள் சீரியல் பிரபலத்துக்கு இப்படி ஒரு நிலைமையா..!

balaji

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளும் ரசிகர்களை பெருமளவு கவர்ந்து வருகிறது அந்த வகையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் பெரும்பாலும் இல்லத்தரசிகளை மட்டுமே கவர்ந்து வருகிறது.

அந்த வகையில் இளசுகளை கவர வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் உருவாக்கப்பட்ட தொடர்தான் கனா காணும் காலங்கள். இவ்வாறு உருவான சீரியலை 90is ரசிகர்களால் ஒருபோதும் மறக்க முடியாது அந்த வகையில் பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள் முதல் பல்லு கொட்டிய கிழவர் வரை இந்த சீரியலை பார்த்து ரசித்து வந்தார்கள்.

இவ்வாறு இந்த சீரியலின் இரண்டாம் பாகமாக கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை என்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்றும் அடுத்தடுத்த பாகங்களை உருவாகி வந்தார்கள் அந்த வகையில்நான் அது மாபெரும் வெற்றி தொடராக அமைந்துவிட்டது.

மேலும் இந்த தொடரில் நடித்த பல்வேறு பிரபலங்களும் இன்று சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பது மட்டுமில்லாமல் சிம்பு பட வாய்ப்புகளையும் பெற்று கெத்து காட்டி வருகிறார்கள். இந்த தொடரில் நடித்த நடிகர் ஒருவர் காதல் சொல்ல வந்தேன் என்ற திரைப்படத்தில் கூட கதாநாயகனாக நடித்து இருப்பார் அவருடைய பெயர் பாலாஜி.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் பிரித்தீ என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது அந்தவகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு காதலர் தின விழாவை முன்னிட்டு தன்னுடைய மனைவியை விவாகரத்து பெற்றதாக அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார். பிறகு நமது நடிகர் எந்த ஒரு திரையிலும் முகம் காட்ட கூட இல்லை.