கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தொடர்ந்து பலர் உயிரிழந்து வருகிறார்கள். அந்தவகையில் கொரோனாவின் இரண்டாம் அலையில் எத்தனை தமிழ் கலைஞர்கள் அதாவது நடிகர்கள் தமிழகத்தில் இருந்துள்ளார்கள் என்பதை தற்போது பார்ப்போம்.
கொரோனாவின் காரணமாக தொடர்ந்து பல திரைப்பிரபலங்கள் உயிரிழந்து வருகிறார்கள். எதிர்பார்க்காமல் திடீரென்று உடல் நலக்குறைவு என்று மருத்துவமனையை அனுமதிக்கப்படுகிறார்கள். அடுத்த இரண்டு நாட்களிலேயே அவர்கள் இறந்து விடுவதால் ரசிகர்கள் திரைப்பிரபலங்கள் என்று அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு வருகிறது. அனைவரும் மனரீதியாக பலவினமாக இருந்து வருகிறார்கள்.
முதலில் திரைவுலகில் உயிரிழந்தவர் தான் இயக்குனர் எஸ் பி ஜெகநாதன். இவர் மூளை இரத்த கசிவு ஏற்பட்டு கடந்த மார்ச் 14-ஆம் தேதி உயிரிழந்தார். இவர் தமிழ் சினிமாவில் ஒரு பிரபல இயக்குனர் ஆவார்.அந்த வகையில் இயற்கை, பேராண்மை பொதுவுடமை போன்ற சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்துக்களை மையமாக வைத்து திரைப்படங்களை இயக்கியவர்.
இவரை தொடர்ந்து ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் என்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய ஒன்று நடிகர் விவேக்கின் மறைவு. இவர் சின்ன கலைவாணர் என்று ரசிகர்களால் போற்றப்பட்டார் அது ஒரு சமூகத்தின் மீது மிகவும் அக்கறை உடையவர். இவர் தனது 59 வயதில் மறைத்துள்ளார் அந்தவகையில் இவர் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு அடுத்த நாளே அதாவது ஏப்ரல் 17ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்துள்ளார்.
விவேக்கை தொடர்ந்து எழுத்தாளர் தாரணி இவர் ஏப்ரல் 27ஆம் தேதி தனது 52 வயதில் காலமாகியுள்ளார். இவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஒளிப்பதிவாளரும் பத்திரிகையாளருமான கே வி ஆனந்த் ஏப்ரல் 30ஆம் தேதி உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு கொரோனா உறுதியானால் உயிரிழந்த விட்டார் கடைசியில் இவரின் உடலை யாராலும் பார்க்க முடியாமல் போனது.
சூர்யா, தனுஷ் ஆகியோர்களுடன் பணியாற்றிய சந்திரசேகர் மே 10ஆம் தேதி கொரோனாவால் உயிரிழந்தார். இவர் கஜினி, சுல்தான் உள்ளிட்ட இன்னும் பல படங்களை தயாரித்தவர் ஆவார். இவரின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகினர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சமீபத்தில் உயிரிழந்தவர் தான் காமெடி நடிகர் நெல்லை சிவா இவர் காமெடி நடிகராக 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவர் மாரடைப்பு காரணமாக மே 11ஆம் தேதி உயிரிழந்தார். இவர் இறுதியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களைத் தொடர்ந்து இன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி பிஏ சீரியலில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வந்த குட்டி ரமேஷ் இன்று உயிர் இழந்தார். இவர்களைத் தொடர்ந்து பழம்பெரும் நடிகரான ஜோக்கர் துளசி, விஜயின் திரைப்படமான கில்லி திரைப்படத்தில் நடித்திருந்த மாறன் உள்ளிட்ட இன்னும் பல திரை பிரபலங்கள் உயிரிழந்து உள்ளார்கள்.இதன் காரணமாகத் தற்பொழுது அனைத்து நடிகர் நடிகைகளும் படப்பிடிப்பிற்கு செல்ல பயப்பட்டு வருகிறார்கள்.