இன்று நடைபெறும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு திரை பிரபலங்கள் கோடை வெயில் காரணமாகவும், கூட்டநெரிசல் காரணமாகவும் காலையிலேயே தங்களது ஓட்டினை செலுத்துவதற்க்காக தங்களுக்குரிய வாக்குச்சாவடிக்கு சென்று வரிசையில் நின்று வாக்குகளை பதிவிட்டு ரசிகர்களுடன் சேர்ந்து போட்டோ மற்றும் வீடியோ எடுத்து எடுத்துள்ளனர்.
அந்த வகையில் தல அஜித் தனது மனைவியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜய்யும் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்கு சைக்கிள் மூலம் வந்துள்ளார். இவரை அடையாளம் கண்டறிந்த ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து வந்தனர். இவரும் வரிசையில் நின்று தனது ஓட்டினை பதிவிட்டார்.
மேலும் இவர்களை தொடர்ந்து ரஜினிகாந்த், கமல், கமல் குடும்பத்தினர், ஸ்டாலின், சூர்யா, கார்த்தி, சிவகுமார், சிவகார்த்திகேயன்,சரத்குமார், ராதிகா போன்ற பலரும் வாக்குகளை செலுத்தி விட்டு சென்றுள்ளனர்.
அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணைய தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது..இதோ