சினிமாவில் ஹீரோயின்களை யாரும் மதிப்பதில்லை என தரமற்ற செயல்களை புட்டு புட்டு வைத்த தமன்னா.!

thamannah-1
thamannah-1

தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. பெரும்பாலும் வயதான பிறகு ஏராளமான நடிகைகள் தங்களது மார்க்கெட்டை இழந்து விடுவார்கள் ஆனால் வயதானாலும் கூட தொடர்ந்து இளம் நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்து வரும் நடிகைகளில் தமன்னாவும் ஒருவர்.

இவர் நடிப்பில் கடைசியாக விஷாலுடன் இணைந்து ஆக்சன் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார்.பிறகு தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என மாறி மாறி தொடர்ந்து நடித்து பிசியாக இருந்து வந்த இவர் ஒரு கட்டத்திற்கு பிறகு திரைப்படங்களின் வாய்ப்பு மிகவும் குறைவாக இருந்து வருகிறது.அந்த வகையில் தற்பொழுது நடிகை தமன்னா சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

மேலும் சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றில் சினிமாவில் நடக்கும் தரமாற்ற செயல்களை அனைவருக்கும் புரியும் வகையில் புட்டு புட்டு வைத்துள்ளார். அதாவது அவர் கூறியது, யாரும் பெண்களை சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை நான் பணியாற்றும் படங்களில் ஏதாவது கருத்து கூறினால் அதனை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை மேலும் அது சரியானதா என நம்பளையே யோசிக்க வைத்து விடுகிறார்கள்.

பெண்களுக்கு சினிமா துறையில் மதிப்பு இல்லை என்பது உண்மை ஒரு காலத்தில் ஹீரோக்களுக்கு காதலிக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வந்த நான் தற்பொழுது எல்லாம் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்த வருகிறது. அப்போது விட இப்பொழுது நிலைமை எவ்வளவோ பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மேலும் ஹீரோக்களுக்கு சம்பளம் அதிகமாக கொடுக்கிறார்கள் ஆனால் ஹீரோயின்களுக்கு ஹீரோக்களுக்கு கொடுக்கும் அளவில் ஒரு பங்கு தான் கொடுக்கிறார்கள் மேலும் தயாரிப்பாளர்களிடம் இது சம்பளத்தை கூட வாங்கிவிடலாம் ஆனால் அங்கீகாரம் மட்டும் யாருக்கும் கிடைப்பதில்லை ஒரு ஹீரோ அவர்கள் நடித்த பட பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லை என்றால் அதனை யாரும் பெரிசாக எடுத்துக் கொள்வதில்லை.

ஆனால் கதாநாயகி மட்டும் கண்டிப்பாக பட பிரமோஷனில் கலந்து கொண்டே ஆக வேண்டும் இல்லை என்றால் எனக்கும் தயாரிப்பாளருக்கும் பிரச்சனை என செய்திகள் பரவ தொடங்கி விடுகிறது இதேபோன்று தற்பொழுது இரண்டு பான் இந்தியா படங்களில் நடித்தும் இந்த போஸ்டரில் என்னுடைய புகைப்படங்கள் இடம்பெறவில்லை என தமன்னா கூறியுள்ளார்.