அஜித்-விஜய்க்கு கை தட்டுவதற்கு பதிலாக இவர்களுக்கு கை தட்டுங்கள்.! என கவர்னர் பேச்சு..

ajith vijay
ajith vijay

சமீபத்தில் கவர்னர் ஒருவர் அஜித் விஜய்க்கு கை தட்டுவதற்கு பதிலாக இவர்களுக்கு கை தட்டுங்கள் என கூறி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதாவது கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் அஜித், விஜய்யை கை தட்டுவதற்கு பதிலாக இவர்களுக்கு கை தட்டுங்கள் என கூறியுள்ளார்.

அதாவது புதுச்சேரியில் மகாத்மா காந்தி என்ற கார்ட்டூன் திரைப்படத்தின் இசையமைப்பு வெளியீட்டு விழா நடைபெற்றது.  இந்த திரைப்படத்தின் இசை அமைத்த வெளியீட்டு விழாவிற்கு ஏராளமான அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டுள்ளார்கள்.

எனவே இசை வெளியீட்டு விழாவில் மகாத்மா காந்தி படத்தின் குறுந்தகட்டை வெளியிட்ட புதுமை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியபோது நடிகர் அஜித்துக்கு கை தட்டுவதை விட அதிகமாக அஹிக்சாவாதி காந்திக்கு கை தட்டுங்கள் என்றும் நடிகர் விஜய் கை தட்டுவதற்கு பதிலாக விடுதலை பெற்றுத்தந்த வ.உ.சிக்கு அதிகம் கைதட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதில் புதுமை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தனது பேச்சுத் திறமையினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். இவர் பொதுவாகவே பேசியே அனைவரையும் கவர்ந்து விடுவார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இவ்வாறு அஜித், விஜய்க்கு கை தட்ட வேண்டாம் என்று கூறவில்லை என்றும் அவர்களுக்கு கை தட்டுவதை விட அதிகமாக காந்திக்கும்,வ.ஊ.சி-க்கு கைத்தட்டல்கள் என்றுதான் நான் கூறுகிறேன் என்று அவர் கூறினார். இவரை தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் நடிகர் ராஜேஷ் கண்ணா உள்ளிட்ட இன்னும் பல திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.