இயக்குனர் நெல்சன் கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து விஜயுடன் இணைந்து பீஸ்ட் படத்தை எடுத்து முடித்து உள்ளார் இந்த படம் வருகின்ற ஏப்ரல் 13ம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் தளபதி விஜயுடன் கைகோர்த்து பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்து அசத்தி உள்ளனர்.
பீஸ்ட் படத்திலிருந்து தொடர்ந்து அடுத்தடுத்த அட்டேட்டுகள் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்து இழுக்கின்றன. அந்த வகையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அரபி குத்து பாடல், ஜாலியோ ஜிம்கானா பாடல் அடுத்தடுத்த சில போஸ்டர்கள் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்த வைத்த நிலையில் அண்மையில் படத்தின் டிரைலரும் வந்து ரசிகர்களை கவர்ந்து இழுத்தது.
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இயக்குனர் நெல்சன் பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார் அதில் படம் குறித்தும், விஜய் குறித்தும் தொடர்ந்து பேசிவருகிறார். அப்படி அவர் பேசுகையில் பீஸ்ட் படத்தை முதலில் பார்த்தது அனிருத் என்றும் அவர்தான் என்னை பீஸ்ட் படம் எடுக்க தூண்டுகோலாக இருந்தவர் என்றும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து மற்றொரு பேட்டி ஒன்றில் விஜயின் தீவிர ரசிகன் நான் விஜய்க்காக பார்த்து பார்த்து இந்த கதையை எழுதினேன். இந்த படம் ஜேம்ஸ் பாண்ட் படம் போல இருக்கும் என கூறினார் இப்பொழுதுகூட பேட்டி ஒன்றில் நடிகை பூஜா ஹெக்டே குறித்தும் பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது :
விஜய்யின் 65 வது திரைப்படமான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நாங்கள் நடிகையை தேடிக் கொண்டிருந்தோம். அப்பொழுது ala vaikunthapurramuloo படம் ரிலீஸ் ஆகிய நேரம் அது அந்த படத்தை பார்த்து விட்டு அவரை தேர்வு செய்தோம் என கூறினார்.