நடிகர் மாதவனின் தனது 53வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வரும் நிலையில் அவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் மாதவன் மணிரத்தினத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமானார் அலைபாயுதே திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய ரீச்சினை பெற்று தந்தது.
இவ்வாறு முதல் திரைப்படத்திலேயே ஏராளமான பெண்களின் மனதை கவர்ந்த நாயகனான மாதவன் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என அழைக்க தொடங்கினார்கள். இதனை அடுத்து கௌதம் மேனன் உடன் இணைந்து மின்னலே திரைப்படத்தில் நடித்த பிளாக்பஸ்டர் பெற்று தந்தது. எனவே தொடர்ந்து முதல் இரண்டு படங்களும் வெற்றியினை பெற்றதால் அடுத்தடுத்து திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார்.
அந்த வகையில் கன்னத்தில் முத்தமிட்டால், ரன், அன்பே சிவம், ஜேஜே, ஆயுத எழுத்து என ஏராளமான வெற்றி திரைப்படங்களை குவித்தார். இந்நிலையில் மாதவன் இன்று தனது 53வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதற்கு சமூக வலைதளத்தின் மூலம் திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என ஏராளமானவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் மாதவனின் சொத்து மதிப்பு, அவர் வாங்கும் சம்பளம், கார் கலெக்சன் என ஏராளமான தொகுப்புகள் வெளியாகி உள்ளது. அதாவது 25 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் வெற்றிகரமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் மாதவனின் சொத்து மதிப்பு மொத்தம் ரூபாய் 15 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. மும்பையில் பிரம்மாண்டமான பங்களா இருப்பதாகவும் அங்கு தான் தற்போது தனது மகன் மற்றும் மனைவியுடன் வசித்து வருகிறாராம்.
மேலும் இது தவிர்த்து சென்னையில் ரூபாய் 18 கோடி மதிப்பில் வீடு ஒன்றை மாதவன் வாங்கி இருக்கிறாராம். நடிகர் மாதவன் ஒரு படத்திற்காக ரூபாய் 6 முதல் 8 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம் இது மட்டும் அல்லாமல் விளம்பரங்களில் நடிப்பதற்காக ஒரு விளம்பரத்திற்காக ரூபாய் ஒரு கோடி வரை கிடைக்கிறதாம். இதனைத் தவிர்த்து மாதவனுக்கு கார்கள் என்றால் மிகவும் பிடிக்கும் அதன் காரணமாக எம்யு டபுள்யு, ஆடி, ரேஞ்ச் ரோவர் போன்ற முன்னணி நிறுவனங்களின் சொகுசு கார்களை வைத்திருக்கிறாராம்.
இதனை அடுத்து பைக் மீதும் தீரா காதல் கொண்ட மாதவன் உலகில் விலை உயர்ந்த பைக்குகளில் ஒன்றான BMW K1600 GTL பைக் வைத்துள்ளாராம். பிறகு ரூபாய் 46 லட்சம் மதிப்புள்ள ரோட்மாஸ்டர் க்ரூஸரும் அவரிடம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்பொழுது நடிகர் மாதவன் நடிப்பில் தமிழில் டெஸ்ட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இதனை அடுத்து திருச்சிற்றம்பலம் படத்தின் இயக்குனர் மித்ரன் ஆர் ஜஹவர் இயக்கும் படத்தில் மாதவன் நடித்து வருகிறார்.