90 காலகட்டங்களில் சாக்லேட் பாயாக வலம் வந்த ஒரு நடிகர் சினிமா உலகில் மீண்டும் ஜொலிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் கூட இருந்தவர்கள் சரியான நேரம் பார்த்து காலை வாரி விட்டனர் இதனால் சினிமா உலகில் வாய்ப்பு கிடைக்காமல் விளம்பர படங்களில் நடித்தார். விளம்பரப் படங்கள் இவருக்கு ஏராளமாக வந்தாலும்..
ஒரு சில விளம்பரங்கள் இவருக்கு கேளியும் கிண்டலையும் பெற்று தந்தது இதனால் விளம்பர படங்களிலும் கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பதை குறைத்துக் கொண்டு தனது குடும்பத்துடன் தற்பொழுது நியூசிலாந்தில் செட்டிலாகி வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு நடந்த துரோகங்களை வெளிப்படையாக கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்தேன் அதனை தொடர்ந்து 18 படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது 18 படங்களிலும் நடிப்பதாக கூறிய அட்வான்ஸ் வாங்கியுள்ளார் அதில் 2 திரைப்படம் சரியாக ஓடவில்லை.. இதனால் மொத்த 16 திரைப்பட தயாரிப்பாளர்களும் அவரிடம் கொடுத்த அட்வான்ஸ் வாங்கிக் கொண்டனர்.
அதன் பிறகு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் படத்திலும், காதலுக்கு மரியாதை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த ஹீரோவின் மேனேஜர் சார் மற்ற படங்கள் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என கூறியுள்ளார். இதனால் இந்த இரண்டு திரைப்படங்களும் கைநழுவி போனதாம்.. இப்படி ஒவ்வொருவரும் அந்த ஹீரோயின் முதுகில் குத்தி விட்டாராம்..
இனி நமக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் கிடைக்காது என தெரிந்து கொண்ட அந்த ஹீரோ சென்னையில் உள்ள அனைத்து சொத்துக்களையும் வித்துவிட்டு தனது குடும்பத்துடன் நியூசிலாந்தில் செட்டில் ஆகிவிட்டார் நியூசிலாந்துக்கு சென்ற புதிதில் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்துள்ளார் மேலும் அங்கேயே உள்ள கழிவறைகளை சுத்தமும் செய்து இருக்கிறார். அங்கு கார் மெக்கானிக் வேலையும் பார்த்தாராம் இதை அத்தனையும் மகிழ்ச்சியுடன் செய்ததாக அந்த பேட்டியில் கவலையுடன் கூறி இருக்கிறார்.