கொரோனா வைரஸினால் உலகமே எப்பொழுது தடுமாறிக் கொண்டிருக்கிறது அந்த அளவிற்கு தற்போது பரவி கொண்டிருக்கிறது.தற்பொழுது சீனாவைத் தொடர்ந்து இத்தாலி, ஈரான்,இங்கிலாந்து ,ஸ்பெயின், அமெரிக்கா ,இந்தியா மற்றும் பல நாடுகளில் தற்போது பரவிக்கொண்டிருக்கிறது.
கொரோனா வைரசுக்கு எதிர்வினையாற்றும் மருந்தை உலக சுகாதார அமைப்பும் மற்ற நாடுகளும் தற்பொழுது ஆராய்ந்து வருகின்றனர். இதுவரை கொரோனா வைரசினால் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து உள்ளனர். வைரஸை அழிக்க முடியாததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தற்பொழுது அரசும் மற்றும் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவிலும் தற்பொழுது பரவி உள்ளது. இதனால் பல மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன அதிலும் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இந்தியாவில் தற்பொழுது 144 தடை உத்தரவு ஏப்ரல் 15 வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவினால் ஒட்டுமொத்த உலகமும் தற்பொழுது நிலை தடுமாறியுள்ளது.
சினிமா உலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சோ ராமசாமி. பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கியவர். இவர் பத்திரிகை ஆசிரியர், நாடகாசிரியர் ,வக்கீல் என பல்வேறு பொறுப்புகளை திறம்பட மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமில்லாமல் வாரப் பத்திரிக்கையான துக்ளக் என்ற பத்திரிகையை நடத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இவர் 200க்கும் படங்களில் நடித்துள்ளார்.
சோ அவர்கள் சீனா பற்றி சில ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருந்தார் தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. சீனா அடிக்கடி இந்தியாவின் மீது படையெடுத்து கொண்டிருக்கும் அதுமட்டுமில்லாமல் அருணாச்சலப்பிரதேசம் எங்களது என்று சொல்லி பெரிய ஆர்ப்பாட்டம் செய்து இருந்தது சீனா என அவர் குறிப்பிட்டிருந்தார்.
பார்டர் விஷயத்தில் சீனாவை விட மோசமாக நடந்து கொள்ள வேறு எந்த நாடும் இருக்காது. ஆனால் இன்றும் இந்தியா சீனா நல்ல உறவில் இருக்க வேண்டும் என பலர் தயாராகி இருக்கின்றனர் என்னை பொருத்தவரை சீனாவை அமுக்கிவிட்டு அமெரிக்காவுடன் உயர்த்தி இருக்க வேண்டும் என கூறியிருந்தார்.மேலும் சீனா எப்பொழுதும் இந்தியாவிற்கு பல இடைஞ்சல்களை தருமே தவிர வேறு எந்த நன்மையும் கிடையாது என அவர் தெரிவித்திருந்தார் இது போன்று மேலும் அவர் பல சுவாரஸ்யமான விஷயங்களை நம்முடன் பகிர்ந்துள்ளார்
சோ அவர்களின் சுவாரஸ்யமான வீடியோ இதோ
#chor #actor pic.twitter.com/usYHb5k9Cp
— Tamil360Newz (@tamil360newz) March 26, 2020