சீயான் 60 : ஷூட்டிங் ஸ்பார்ட்டில் கும்மாளம் அடித்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் துருவ் விக்ரம்.! யார் யார் இருகாங்க பாருங்கள்..

chiyan-60
chiyan-60

தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு பெயர் போனவர்கள் வெகு குறைவு அதில் ஒருவராக இருப்பவர் விக்ரம். படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது உடலை குறைத்தும், ஏற்றுவதும்  இவருக்கு கைவந்த கலை. மேலும் ஒவ்வொரு படத்திற்கும் தனது நடிப்பை மேன்படுத்தி கொண்டே செல்வார்.

இவரை தொடர்ந்து இவரது மகனும் சினிமாவில் கால் தடம் பதித்து விட்டார். தற்போது அவருடன் ஜோடி போட்டு நடிக்கிறார் அந்த அளவிற்கு தற்போது வளர்ந்து நிற்கிறார் துருவ் விக்ரம் வர்மா திரைப்படத்தில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்திய நிலையில் தற்போது தனது அப்பாவின் 60வது திரைப்படத்திலும் இணைந்து பணியாற்று கிறார்.

அப்பா எட்டடி பாஞ்சா பிள்ளை பதினாறு அடி பாயும் என்பது நாம் கேள்விப்படுகிறோம் அது இப்பொழுது நிஜத்தில் நடக்கிறது. விக்ரம் எப்படி நடிப்பில் தனது அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறோ அதுபோல துருவ் விக்ரமும் அவரைப் போல பல மடங்கு நடிப்பிற்காக எந்த அளவுக்கு இறங்குவார் என தெரியவருகிறது.

அது வர்மா திரைப்படத்தில் பார்க்க முடிந்தது மேலும் இந்த படத்திற்காகவும் தனது உடலை தாறுமாறாக ஏற்றி அவரது அப்பாவுக்கு சவாலாக நிற்கிறார். சியான்60 வது திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் எடுக்கிறார். இந்தத் திரைப்படத்தையும் மிகப்பெரிய அளவில் லலித் குமார் என்பவர் தயாரிக்கிறார் மேலும் இந்த படத்திற்கு கூடுதல் பலமாக அனிருத்இசை அமைக்கிறார்.

இந்த படம் கேங்ஸ்டர் படம் என்பதால் இந்த படத்திற்காக விக்ரம் துருவ் விக்ரமும் உடம்பை தாறுமாறாக ஏற்றி புகைப்படங்கள் வெளியாகிய நிலையில் தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படத்தை தற்போது துருவ் விக்ரம் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை வெளியிட்டு அவர் கூறியது இந்த புகைப்படமும் இரண்டு மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது.

தற்போது இருக்கின்ற சூழல் சரி இல்லாததால் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை நாம் அனைவரும் கொரோனாவை வென்று அதன் பிறகு ஒன்றிணைந்து  ஜமாய்போம் என குறிப்பிட்டுள்ளார்.

dhuruv vikram
dhuruv vikram